நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் தற்போது அந்த படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகி இருக்கிறது.
விஜய் படம் என்றாலே சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை. அந்த அளவுக்கு எங்கிருந்து பிரச்சனை வருமோ என்று தெரியாது. இந்த நிலையில் தற்போது லியோ திரைப்படத்திற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
அதாவது லியோ திரைப்படத்திற்கான முன்பதிவு சென்னையில் பெரும்பாலான திரையரங்குகளில் இன்னும் தொடங்கப்படவில்லை. இதற்கு காரணம் தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவு தான் என்று கூறப்படுகிறது.
அதாவது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் காலையில் 9:00 மணிக்கு தான் முதல் காட்சிகள் போடப்பட வேண்டும் என்றும் இரவு 1:30 மணிக்கு காட்சிகள் முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் லியோ திரைப்படம் இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடியது. 15 மணி நேரம் இடைவேளை என வைத்துக்கொண்டால் 3 மணி நேரம் ஆகும் திரையரங்கை விட்டு மக்கள் வெளியேறி மீண்டும் அடுத்த காட்சிக்கு திரையரங்குகளுக்கு உள்ளே வருவதற்கு என 30 நிமிடங்கள் தேவைப்படும்.
இதனால் ஒரு காட்சிக்கு 3:30 மணி நேரம் தேவைப்படும் என்பதால் தமிழக அரசு அனுமதித்துள்ள நேரத்தில் ஐந்து காட்சிகளை போட முடியாது என்று திரையரங்கு உரிமையாளர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
இதனால் சென்னையில் இதுவரை பெரும்பாலான முக்கிய திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படவில்லை. இந்த பிரச்சனை எப்போது தீரும் என்றும் இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனால் தமிழக அரசு நிர்வாகிகளிடம் தயாரிப்பாளர் குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் 7 மணிக்கு முதல் காட்சியை போட அனுமதி கேட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் இன்று இரவு அல்லது நாளை சென்னையில் புக்கிங் தொடங்கிவிடும் என தெரிகிறது.