Tuesday, May 7, 2024
- Advertisement -
Homeசினிமாவிஜய் இப்படி செய்யலாமா? கெட்ட வார்த்தை பேசியதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் இப்படி செய்யலாமா? கெட்ட வார்த்தை பேசியதால் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்படுத்திய நிலையில் சர்ச்சை ஒன்றுக்கும் பிள்ளையார் சுழி போட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் விஜய் திரைப்படங்கள் வசூலில் அதிக மாக இருக்கிறதுக்கு பல காரணங்கள் இருக்கிறது. குறிப்பாக அவருடைய படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவினாலும் வசூல் ரீதியாக வெற்றியை பெறுகிறது.

இதற்குப் பின்னால் விஜய்க்கு ஏராளமான குடும்ப ரசிகர்கள் இருக்கிறார்கள். சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை விஜயை பிடிக்கும் என்பதால் அவர்களுடைய படத்தை விரும்பி பார்ப்பார்கள். விஜய் படம் என்றாலே முகம் சுளிக்கும் வகையில் காட்சி இருக்காது என்றும் பலர் விரும்புகிறார்கள்.

- Advertisement -

மேலும் நடிகர் விஜயை சிறு குழந்தைகள் அதிக அளவில் பின்தொடர்கிறார்கள். விஜய் பேசும் வசனத்தை அப்படியே பேசும் குழந்தைகள் நம் அனைவர் வீட்டிலும் இருப்பார்கள். இந்த நிலையில் லியோ ட்ரெய்லரில் ஒரு கெட்ட வார்த்தை இடம்பெற்று இருப்பது அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்திருக்கிறது.

- Advertisement -

விஜய் எது செய்தாலும் அதை அப்படியே செய்யக்கூடிய குழந்தைகள் இருக்கும் நிலையில் இவ்வாறு கெட்ட வார்த்தையை விஜய் பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அப்படி ஒரு கெட்ட வார்த்தையை சில குழந்தைகள் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

அவர்களுக்கெல்லாம் இந்த ட்ரெய்லர் மூலம் பாடம் எடுத்துச் சொல்லிக் கொடுப்பது போல் இருக்கிறது. விஜய் போன்ற மிகப் பெரிய குழந்தைகள் ரசிகர்கள் பட்டாளம் உள்ள நடிகர் இவ்வாறு சமூக அக்கறை இன்றி நடக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

உடனடியாக அந்த கெட்ட வார்த்தையை பீப் போட்டு எடுத்து விட வேண்டும் என்றும் இது போன்ற தவறை விஜய் படக்குழு முறை செய்ய விடக்கூடாது என்றும் விஜய் அபிமானிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Most Popular