Thursday, July 18, 2024
- Advertisement -
Homeசினிமாதெறிக்கவிட்ட லியோ டிரைலர்..! ஒரு மணி நேரத்தில் யூ டியூப்பில் உலக சாதனை

தெறிக்கவிட்ட லியோ டிரைலர்..! ஒரு மணி நேரத்தில் யூ டியூப்பில் உலக சாதனை

தமிழ் சினிமாவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு ஏற்படுத்திருக்கும் திரைப்படம் என்றால் அது நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தான். லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வசூலை முறியடிக்குமா?

- Advertisement -

இல்லை குறைந்தபட்சம் ஜெய்லர் படத்தின் ரெக்கார்டை முறியடிக்குமா என்பதுதான் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இந்த வகையில் லியோ ட்ரைலர் இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த ட்ரெய்லரை பார்த்ததும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறி விட்டது. நடிகர் விஜயின் சமீப படங்களில் வெளியான டிரைலரில் இதுதான் மரண மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் நடிகர் விஜயின் நடிப்பு திறமை முற்றிலும் இந்த படத்தில் தெரிய வந்திருக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளும் வேற லெவல் இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் லியோ ட்ரெய்லர் யூடியூப்பில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறது. அதன்படி ஒரு நிமிடத்தில் லியோ டைலர் ஒரு லட்சம் லைக்குகளை பெற்று இருக்கிறது. இதேபோன்று 21 நிமிடத்தில் 10 லட்சம் பேர் லியோ ட்ரெய்லரை பார்த்திருக்கிறார்கள். இது உலக அளவில் சாதனையாக பார்க்கப்படுகிறது .

20 நிமிடத்தில் 40 லட்சம் பேர் லியோ ட்ரெய்லரை பார்த்திருக்கிறார்கள்
இதேபோன்று ஒரு மணி நேரத்தில் லியோ ட்ரெய்லரை ஒரு கோடி பார்வையாளர்கள் பார்த்திருப்பதாக யூடியூபில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.இதேபோன்று 60 நிமிடத்தில் 15 லட்சம் லைக்களை லியோ ட்ரெய்லர் பெற்றிருப்பதாகவும் ட்ரைலரை வெளியிட்ட சன் டிவி தெரிவித்திருக்கிறது.

இதேபோன்று இந்த ட்ரெய்லர் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் தனியாக ரிலீஸ் செய்யப்பட்டது மேலே சொன்ன அனைத்து ரெக்கார்டுகளும் தமிழ் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டது.

Most Popular