Tuesday, April 1, 2025
- Advertisement -
Homeசினிமாவாத்தி படத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்.. மறக்காம தியேட்டருக்கு போய்டுங்க!

வாத்தி படத்தில் விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்.. மறக்காம தியேட்டருக்கு போய்டுங்க!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. கல்வி வியாபாரம் மையமாக மாறுவதை எதிர்த்து பேசும் வகையில் புரட்சிகரமான படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அமைத்துள்ள பாடல் அனைத்தும் பெரும் ஹிட் ஆனது.

குறிப்பாக வா வாத்தி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆகிறது.இந்தப் படத்திற்கான முன்பதிவு தமிழ் நாடு முழுவதும் தொடங்கிவிட்டது. எனினும் ரசிகர்கள் பெரிய அளவில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் வாத்தி பட தயாரிப்பாளர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளார். இரண்டு திரைப்படத்தையுமே லலித் குமார் தான் வெளியிடுகிறார். இதனால் வாத்தி திரைப்படத்தின் இடைவேலையின் போது லியோ படத்தின் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதற்காக டீசரை திரையரங்கில் வெளியிட சென்சார் சான்றிதழ் வாங்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து வாத்தி படத்தின் இண்டர்வலில் லியோ ட்ரைலர் அனைத்து திரையரங்குகளிலும் ஒளிபரப்பப்படும். இதனால் விஜய் ரசிகர்களுக்கு நல்ல சர்ப்ரைஸ் கிடைத்திருக்கிறது. வாத்தி திரைப்படம் தமிழக திரையரங்கு உரிமம் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது.

இதில் வாத்தி படம் வெற்றி பெற வேண்டும் என்றால் தமிழகத்தில் குறைந்தபட்சம் 40 கோடி ரூபாய் வசூல் பெற வேண்டும். ஆனால் பிப்ரவரி மாதம் எப்போதுமே திரைப்படங்கள் அவ்வளவாக ஓடாது. இதனால் போட்ட காசை எடுக்க முடியுமா என்று தயக்கம் தயாரிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களை திரையரங்குக்கு இழுக்க பெரிய நடிகர்களின் டீசரும் படத்துடன் திரையிடப்படுகிறது.

Most Popular