தமிழ் சினிமாவில் அதிக வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படும் படம்தான் தளபதி விஜய் நடிக்கும் லியோ. இந்த படத்தை விக்ரம் வெற்றிக்கு பிறகு விஜயுடன் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளார்.
இந்தப் படத்திற்கான வியாபார பணிகள் தற்போது 300 கோடியை எட்டி விட்டதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. விஜய் படத்திற்கு அதிக வருமானம் கிடைக்கப் போகும் படமாக லியோ இருக்கும் என திரைத்துறை வட்டார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்டப் பணிகள் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் 50 நாட்களுக்கு மேல் ஷூட்டிங் நடந்த நிலையில் சென்னையில் சில காட்சிகள் மட்டும் எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் மீண்டும் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மே ஒன்றாம் தேதியிலிருந்து மீண்டும் லியோ படப்பிடிப்பு தொடங்க உள்ளது. சுமார் ஒரு மாதம் இதன் ஷூட்டிங் நடைபெறும் என தெரிகிறது. இந்த படப்பிடிப்பில் விஜய்,திரிஷா மற்றும் சஞ்சய்தத் ஆகியோர் இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முக்கிய காட்சிகளை இந்த ஷெடியில் லோகேஷ் கனகராஜ் எடுப்பார் என தெரிகிறது.
நடிகர் அர்ஜுனும் ஒரு சில நாட்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஷூட்டிங் முடிந்த பிறகு பட குழு கிளைமேக்ஸ் காட்சிகளை எடுக்க ஹைதராபாத் செல்கிறது. அங்கு விமான நிலையம் போல் ஒரு செட் அமைக்கப்பட்டு அங்கு காட்சிகள் எடுக்கப்பட உள்ளன.
இதனை அடுத்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் எல்லாம் லியோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிஷா, பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்திற்காக தற்போது ப்ரமோஷன்காக நாடு முழுவதும் சென்று வருகிறார். இதனால் லியோ பட பிடிப்பு கொஞ்சம் தாமதமானது குறிப்பிடத்தக்கது.