சினிமா

லியோ படத்தில் சஞ்சய் தத் லுக் இது தான்.. காஷ்மீருக்கு பறந்த வில்லன்

லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி பூஜை விடுமுறையை முன்னிட்டு லியோ திரைப்படம் ரிலீசாக இருக்கிறது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்யும் லோகேஷ் கனகராஜன் இணைந்து இருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Advertisement

தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெரும் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் ட்ரிபிள் ஆர், கன்னடத்தில் கேஜிஎப் 2 போல் தமிழில் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூல் சாதனை படைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

தமிழ் ,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் ஹிந்தியில் படத்தை வியாபாரம் செய்வதற்காக லியோ படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் கதையைக் கேட்ட உடனே இதில் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டதாக சஞ்சய் கூறியிருந்தார்.

Advertisement

இந்த நிலையில் தற்போது முக்கிய அப்டேட் லியோ பட குழு படத்திலிருந்து வந்துள்ளது. லியோ படத்தின் சண்டைக் காட்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் காஷ்மீருக்கு இன்று சென்றுள்ளார். இதில் சஞ்சய் தத்தின் தோற்றம் படும் மாஸாக உள்ளது.

தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி எவ்வளவு ஸ்டைலிஷ் ஆக இருப்பாரோ, அதை போல் சஞ்சய் தத்தும் காட்சி அளிக்கிறார். மார்ச் 23 வரை காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தும் லியோ பட குழு இந்த கட்டத்தில் விஜய்யும் சஞ்சய் தத்தும் மோதும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட இருக்கிறது.

சஞ்சீதத்தின் இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. சஞ்சய் தத் வில்லனா ? இல்லை ரோலக்சுக்கும் சஞ்சய் தத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்று தற்போது ரசிகர்கள் அதனை பற்றி அதிக அளவில் பேசி வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top