Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி விஜயால் முன்னேறிய நடிகர்கள் ..!எப்படி தெரியுமா..?

தளபதி விஜயால் முன்னேறிய நடிகர்கள் ..!எப்படி தெரியுமா..?

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் .இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு விலை அதிகம் என்பது போல் ஒரு பெயரை உருவாக்கி வைத்து விட்டு தற்பொழுது அரசியல் நோக்கி சென்று விட்டார் தளபதி விஜய்.

- Advertisement -

பீஸ்ட் ,வாரிசு, லியோ போன்ற திரைப்படங்கள் எல்லாம் தளபதி விஜய் நடிக்கின்ற திரைப்படம் என்பதாலே திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பே, திரைப்படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே பாக்ஸ் ஆபிஸில் நல்ல விலைக்கு விற்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது .அந்த அளவிற்கு உச்சகட்ட நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்துடன் திரைப்பட வாழ்வை முடித்துக் கொள்ளப் போவதாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

இது ஒரு புறம் இருக்க தளபதி விஜய் வளர்ந்து வரக்கூடிய நாட்களில் திரைப்படக் கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் பொழுது அவர் வேண்டாம் என்று ஒதுக்கிய சில திரைப்படங்கள் வேறு சில நடிகர்களுக்கு திருப்புமுனையாக அமைந்து வெற்றி அடைந்திருக்கிறது. அது போன்ற திரைப்படங்கள் பட்டியல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

தளபதி விஜய் கதை கேட்டு நடிக்க மறுத்த திரைப்படங்களில் நடிகர் அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படம் ஒன்று. இத்திரைப்படம் முதலில் தளபதி விஜயை  தான் சென்று சேர்ந்தது ஆனால் அவர் மறுத்ததால் இயக்குனர் சங்கர் அர்ஜுனை வைத்து முதல்வன் திரைப்படத்தை இயக்கி வெற்றி பெற செய்தார் .இந்த திரைப்படம் நடிகர் அர்ஜுனின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

அதேபோல் இயக்குனர் தரணி இயக்கிய தூள் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்திருந்தார் . இந்த திரைப்படமும் தளபதி விஜய் நிராகரித்து திரைப்படங்களில் ஒன்றாகும். மேலும் லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் தளபதி விஜய் வேண்டாம் என்று திரைப்படத்தில் ஒன்றுதான். இந்த திரைப்படம் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது .இந்த திரைப்படம் வந்த காலகட்டத்தில் நடிகர் விஷால் சினிமாவில் அசுர வளர்ச்சி அடைந்து வந்தார்.

தல அஜித்திற்கு தலை என்று பெயரை வாங்கிக் கொடுத்தது அவர் நடித்த தினா திரைப்படம் தான். இந்த திரைப்படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார் முதலில் தல அஜித்திடம் கேட்பதற்கு முன் தளபதி விஜய்யிடம் தான் இந்த திரைப்படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ். அதுவும் தளபதி விஜய் வேண்டாம் என்று கூறிவிட்டதால் தல அஜித்திற்கு வாய்ப்பு கிடைத்து வெற்றி பெற்றார்.

கடைசியாக நடிகர் சூர்யா நடித்து இந்த திரைப்படம் சூர்யாவிற்கு என்றே எடுக்கப்பட்டது போல் வரிசையாக மூன்று பாகங்கள் நடித்து பெயர் பெற்ற சிங்கம் திரைப்படத்தை முதலில் இயக்குனர் ஹரி தளபதி விஜய்யிடமே அணுகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதையும் தளபதி விஜய் வேண்டாம் என்று கூறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Most Popular