Thursday, November 21, 2024
- Advertisement -
Homeசினிமாகுறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள்..! பட்டியலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்கள்..! பட்டியலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்..!

சினிமாவைப் பொறுத்தவரை நாம் பெரிய பட்ஜெட்டில் திரைப்படம் எடுத்தால் அதில் நிறைய ஆக்சன் காட்சிகள் ,பாடல் காட்சிகள், செட்டிங்ஸ் என்று பல விஷயத்திற்கு செலவு செய்து பிரம்மாண்டமாக உருவாக்கினாலும் நிறைய திரைப்படங்கள் மண்ணை கவ்விக்கொண்டு தோல்வியடைகிறது.

- Advertisement -

போட்டதில் பாதியைக் கூட எடுக்க முடியாத அளவிற்கு தயாரிப்பாளர்கள் நிலைகுலைந்து போய் விடக்கூடிய சூழ்நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவிலேயே அதிகமாக பார்க்க முடிகிறது.

அந்த வகையில் தற்பொழுது குறைந்த பட்ஜெட்டில் திரைப்படத்தை இயக்கி அதிக லாபத்தை பார்த்த திரைப்படங்களில் பட்டியல் இணையத்தில் வெளியாகியிருக்கிறது வெறும் நான்கு கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்து திரைப்படங்களை இயக்கி 40 லிருந்து 60 கோடி வரை வசூலை பெற்று சாதித்த திரைப்படங்களின் பட்டியலை தற்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது நடிகர் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த போர் தொழில் திரைப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளிவந்து அசுர வெற்றியைப் பெற்றது .இந்த திரைப்படம் வெறும் 4 கோடி ரூபாய் செலவு இயக்கப்பட்டு 60 கோடி ரூபாய் வரை வசூலை பெற்றது.

- Advertisement -

நடிகர் அருள்நிதி நடிப்பில் திகில் திரைப்படமாக வெளிவந்த டிமான்டி காலனி திரைப்படமும் எந்தவித ஆரவாரமுமே இன்றி அமைதியாக வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படமும் வெறும் 4 கோடி ரூபாய் செலவில் தான் இயக்கப்பட்டது திரைப்படத்தில் இருந்த திகில் காட்சியால் 55 கோடி வசூலை பெற்று வெற்றி.

அதேபோல் இயக்குனர் நெல்சனின் முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நடிகையின் நயன்தாராவின் முக்கிய கதாபாத்திரமாக வைத்து சீரியஸான கதையை காமெடியாக காட்டி ரசிக்க வைத்த இயக்குனர் நெல்சன் இதை வெறும் 4 கோடி ரூபாய் செலவில் தான் இயக்கினார் .இந்த திரைப்படத்திற்கு கிடைத்த வெற்றி 45 கோடி ரூபாய் வசூல் ஆகும்.

இந்த பட்டியலில் எதிர்பாராத சில திரைப்படங்களும் இடம் பெற்று இருக்கிறது. நடிகர் ஆர் ஜே பாலாஜி நடித்த எல் கே ஜி திரைப்படம் வெளிவந்த பொழுது மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்றது இத்திரைப்படமெல்லாம் இந்த அளவுக்கு வசூலை பெறுமா என்பதை பெரிய கேள்வி குறியாக இருந்தது ஆனால் வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கப்பட்ட இந்த திரைப்படம் 42 கோடி வசூலை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்தது. ஆர்.ஜே பாலாஜிக்கு இந்த ஒரு திரைப்படமே போதும் என்பது போல் வெற்றி அடைந்து.

தமிழ் சினிமாவிற்கு காதல் திரைப்படத்தில் ஏதோ ஒரு அதிர்ஷ்டம் எப்பொழுதுமே உண்டு. அந்த வகையில் பள்ளிக்கால காதல் வாழ்க்கையை யாருமே மறக்க முடியாத அளவிற்கு எதார்த்தமான முறையில் இயக்கி பெயர் பெற்ற 96 திரைப்படம் வெறும் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தான் இயக்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படமும் 40 கோடி ரூபாய் வசூலை பெற்று சாதித்தது

Most Popular