இந்த வாரம் ஓடிடியில் வெளியிடப்பட இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. வார இறுதியில் கொண்டாடுவதற்கு ஓடிடியில் திரைப்படங்கள் தயாராக இருக்கிறது . அது என்னவென்று பார்ப்போம்
வெளியிடுவதற்கு முன்பே கலவையான விமர்சனங்களை பெற்று பல எதிர்ப்புகளை தாண்டி வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ,விக்ராந்த் ,விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் திரைப்படம் வருகின்ற மார்ச் 8ஆம் தேதி நெட்பிக்ஸ் வெளியிடப்பட இருக்கிறது. திரையரங்குக்கு சென்று இந்த திரைப்படத்தை பார்க்க மறுத்த பலரும் இந்த ஒடிடி ரிலீஸ் காகத்தான் காத்திருந்தார்கள் அவர்களுக்கான நேரம் வந்துவிட்டது.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை கேத்ரினா கைஃப் நடித்த மேரி கிறிஸ்மஸ் திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் 8ஆம் தேதி நெட்பிக்ஸ்ல் வெளியிடப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் ஆர்வம் இருக்கிறது. ஜவான் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தாலும் கதாநாயகனாக ஹிந்தியில் முதல் முதலில் நடித்த திரைப்படம் என்றால் அது மேரி கிறிஸ்மஸ் என்பதால் திரைப்படத்தின் மீது பேரார்வம் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
அதைத்தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்த லவ்வர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது . இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 8ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்பட இருக்கிறது . இதற்கு முன்பு நடிகர் மணிகண்டன் நடித்த குட் நைட் திரைப்படமும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் தான் வெளியிடப்பட்டது. அந்த திரைப்படம் எதிர்பாராத பெரும் வெற்றியை ஓடிடியிலே அடைந்தது அதை போல் இத்திரைப்படமும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தெலுங்கில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி யின் கதாபாத்திரத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடித்திருந்த யாத்ரா 2 திரைப்படம் அமேசான் பிரைமில் வருகின்றார் 8ஆம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் மலையாள நடிகர் மம்முட்டி நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தெலுங்கில் நடிகர் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்த அனுமான் திரைப்படமும் வருகின்ற மார்ச் மாதம் 8ஆம் தேதி ஜி5வில் வெளியிடப்பட இருக்கிறது.
வருகின்ற வார இறுதியில் வெளியிடப்பட இருக்கும் அணைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று எப்பொழுது ஓடிடியில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த திரைப்படங்கள் ஆகும்