Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஇவ்வளவு திரைப்படங்கள் வெளியிடவில்லையா..? பட்டியலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்...!

இவ்வளவு திரைப்படங்கள் வெளியிடவில்லையா..? பட்டியலை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!

பல வருடங்களுக்கு முன்பே நிறைய திரைப்படங்கள் இயக்கப்பட்டு இன்னும் அவை திரையரங்கில் வெளியிடப்படாமல் முடங்கி கிடக்கும் திரைப்படங்களின் பட்டியல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது .இவற்றையெல்லாம் வெளியிட்டால் கூட திரையரங்குகள் மீண்டும் கலைக்கட்டும் அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

நடிகர் விஷால் நடிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கிய மத கஜ ராஜா என்று திரைப்படம் 2012 ஆம் ஆண்டு  எடுக்கப்பட்டது.இந்த  திரைப்படத்தில் ஒரு பாடல் கூட அப்பொழுது வெளிவந்தது ஆனால் இன்று வரை இந்த திரைப்படம் வெளியிடப்படவில்லை.

நடிகர் சிவா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு சுமோ என்ற திரைப்படம் இயக்கப்பட்டது அந்த திரைப்படமும் இதுவரை வெளியிடப்படவில்லை

- Advertisement -

நடிகர் பிரபுதேவா மற்றும் லட்சுமிமேனன் நடித்த எங் மங் ஜங் என்ற திரைப்படம் நான்கு வருடத்திற்கு முன்பே எடுக்கப்பட்டது .திரைப்படத்தின் பெயரை ஒரு காணொளி மூலம் இணையத்தில் வெளியிட்டார்கள் .அதுவும் நான்கு வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. ஆனால் இன்னும் திரைப்படம் வெளியிடப்படவில்லை.

- Advertisement -

நடிகர் பிரசாந்த் நடிப்பில் அவருடைய தந்தை தியாகராஜன் இயக்கிய அந்தகன் என்ற திரைப்படம் 2019 ஆம் ஆண்டு இயக்கப்பட்டது. இது ஒரு காமெடி க்ரைம் திரில்லர் திரைப்படமாகும். திரைப்படத்தில் நடிகர் பிரசாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த் ,சமுத்திரகனி ஆகிய பிரபலங்களும் நடித்திருந்தார்கள். கொரோனாவால் இத்திரைப்படம் வெளியிடப்படவில்லை அது இன்றுவரை முடங்கியே இருக்கிறது.

நடிகர் விமல் நடிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டாவது படம் என்ற திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியிடுவதற்காக இருந்தது .ஆனால் ஏதோ பல காரணங்களால் திரைப்படமும் வெளியிடப்படவில்லை .அதேபோல் இவர் நடித்த சண்டக்காரி திரைப்படமும் நான்கு வருடத்திற்கு முன்பே வெளியிடப்பட இருந்தது. அதுவும் வெளியிடப்படவில்லை ஆனால் கடந்த வருடமும் அதை வெளியிட முயற்சி செய்தார்கள். அதுவும் தடைப்பட்டு விட்டது திரைப்படத்தில் நடிகர் விமலுடன் நடிகை ஸ்ரேயா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ஜெய் ,சிவா, சத்யராஜ் ,ஜெயராம், ஷியாம், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கெசந்த்ரா போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்த பார்ட்டி என்ற ஒரு காமெடி திரைப்படம் 2017 இல் வெளியிடுவதற்காக இருந்தது. இந்த திரைப்படமும் இதுவரை வெளியிடப்படவில்லை.

நடிகர் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம், நடிகர் விஷ்ணு விஷால் நடித்த ஜகஜால கில்லாடி ,மோகன்தாஸ், இடம் பொருள் ஏவல் ,ஜிவி பிரகாஷ் நடித்த அடங்காதே ஆயிரம் ஜென்மங்கள், நடிகர் அதர்வா, நடித்த அட்ரஸ் மற்றும் ஒத்தைக்கு ஒத்த போன்ற திரைப்படங்களும் வெளியிடப்படவில்லை.

நடிகர் அரவிந்த்சாமி நடிப்பில் கள்ள பார்ட், சதுரங்க வேட்டை 2 ,வணங்காமுடி, நரகாசுரன் போன்ற நான்கு திரைப்படங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.

அதேபோல் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வா டீல் என்ற திரைப்படமும் மற்றும் பார்டர் என்ற திரைப்படமும் இதுவரை வெளியிடப்படாமல் இருக்கிறது.

இந்த பட்டியலில் நடிகர் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இடம் பெற்றிருக்கிறது .இந்த திரைப்படமும் இந்த ஆண்டிலாவது வெளியிடப்படும் என்று ரசிகர்கள் பெரும் அளவில் ஆர்வம் கொண்டு காத்திருக்கிறார்கள்.

Most Popular