Wednesday, April 17, 2024
- Advertisement -
Homeசினிமாதளபதி 67 குறித்து அப்டேட் தந்த லோகேஷ் கனகராஜ்.. வாரிசு குறித்தும் ரியாக்சன்

தளபதி 67 குறித்து அப்டேட் தந்த லோகேஷ் கனகராஜ்.. வாரிசு குறித்தும் ரியாக்சன்

- Advertisement -

தமிழகம் முழுவதும் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் தற்போது திரை அரங்கங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பு பெற்று வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. . வாரிசு திரைப்படத்தை முதல்  நாளே பார்த்தாக வேண்டும் என்று வெறியோடு கட்டுக்கடங்காத தளபதி ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு திரண்டு நிற்கிறார்கள்.

சாமானியர்கள் மட்டுமல்லாமல் பல திரையுலக நட்சத்திரங்கள், இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள், என்று தளபதி விஜய்க்கு பல தரப்பட்ட ரசிகர்கள் திரைப்பட உலகத்திலேயே உள்ளனர். ஏன் வாரிசு திரைப்படத்தின் உடைய இசையமைப்பாளர் தமன் தளபதியின் தீவிர ரசிகர் ஆவார்.

- Advertisement -

அப்படி பல ரசிகர்களும் ஒருவராக திரையரங்கிற்கு வந்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் வெறும் தளபதி ரசிகர் மட்டுமல்லாமல் அடுத்து தளபதியின் இயக்குனரும் ஆவார்.
தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். திரைப்படம் முடிந்து வெளியான பிறகு லோகேஷ் கனகராஜ் தான் கேட்கப்பட்ட கேள்விகள் மிக கண்ணியமாக பதில் கூறினார்.

- Advertisement -

அதில் தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படம் நன்றாக இருந்தது என்றும் , அதை நான் மகிழ்ச்சியோடு பார்த்தேன் என்றும் கூறினார். மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தளபதி விஜய்க்கு இந்த திரைப்படம் ஒரு புத்துணர்ச்சியான கதாபாத்திரமாக இருந்தது. அதாவது ஒரு நகைச்சுவையோடு குடும்பங்கள் கொண்டாட கூடிய திரைப்படமாக அமைந்திருந்தது என்று கூறினார்.மேலும் தன்னுடைய அடுத்த படமான விஜய் 67 திரைப்படத்துடைய படப்பிடிப்புக்கான தேதியையும் விரைவில் வெளியிடுகிறேன் என்றும் கூறினார்.

90ஸ் கிட்ஸ் களின் மிக விருப்பமான தளபதி விஜய் நடித்த பூவே உனக்காக அதற்குப் பிறகு திருப்பாச்சி, சிவகாசி போன்ற திரைப்படங்கள் குடும்பங்களோடு பார்ப்பதற்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்தது. சில நாட்களாக தளபதி விஜய் அப்படி நடிப்பதில்லை .ஆனால் இந்த வாரிசு திரைப்படத்தின் மூலம் தளபதி விஜய் மீண்டும் குடும்பங்களை கொண்டாட வைத்திருக்கிறார். தளபதி ரசிகர்கள் நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய தளபதியை பார்த்தோம் என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

Most Popular