Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஅனிருத்- லோகேஸ் கனகராஜ் ஜோடிக்கு சோகமான செய்தி

அனிருத்- லோகேஸ் கனகராஜ் ஜோடிக்கு சோகமான செய்தி

கோலிவுடில் தற்போது கொடிகட்டி பறக்கும் இயக்குனர் மற்றும் இசை அமைப்பாளர் யார் என்றால் அது லோகேஸ் கனகராஜ், அனிருதும் தான். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினால் படம் நிச்சயம் டாப் கிளாஸ் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் இந்த ஜோடி இணைந்து மாபெரும் ஹிட் கொடுத்த நிலையில் விக்ரம் திரைப்படம் மூலம் கோலிவுடில் டாப் கிளாஸ் ஜோடி என்ற பெயரை இவர்கள் பெற்றனர்.இந்த நிலையில் லியோ படத்தில் இருவரும் பணியாற்றி வருகின்றனர்.

- Advertisement -

ஏற்கனவே லியோ படத்திற்கு டீசருக்கான பாடல் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்திருக்கிறது. அதனால் பாடல் அனைத்தும் மாபெரும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அனிருதும் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

- Advertisement -

இந்த படத்தை சண்டை பயிற்சி இயக்குனர்களான அன்பு அறிவு இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இது சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்தப் படத்திற்கான அனைத்து வேலைகளும் அன்பு அறிவு செய்து கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு சோகமான செய்தி வந்திருக்கிறது. அதாவது அனிருத்தும் லோகேஷ் கனகராஜன் தொடர்ந்து தங்களுடைய பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார்கள்.

அனிருத்துக்கு படம் மேல் படம் அடுத்தடுத்து குவிந்த வண்ணம் இருக்கிறது. இதேபோன்று லோகேஷ் கனகராஜ் கைதி 2, விக்ரம் 2, தலைவர் 171 என்ற அடுத்த அடுத்த படங்களில் கமிட்டாக இருக்கிறார்.

இதனால் இவர்கள் தற்போது நடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இந்த படத்தை கைவிட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த கதை இவர்களுக்காக எழுதப்பட்டது என்றும் இவர்கள் நடித்தால் தான் சிறப்பாக இருக்கும் என்பதால் தற்போது இந்த படத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Most Popular