Thursday, April 25, 2024
- Advertisement -
Homeசினிமாலோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று - லியோ அப்டேட்ஸ் இன்று வருமா?

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் இன்று – லியோ அப்டேட்ஸ் இன்று வருமா?

- Advertisement -

தமிழ் சினிமாவின் தற்போதைய தலைசிறந்த இயக்குனராக விளங்கி வருபவர் லோகேஷ் கனகராஜ். வங்கி வேலையில் பணிபுரிந்து யாரிடமும் துணை இயக்குனராக இல்லாமல் சினிமாவுக்கு வந்து தற்போது உச்சத்தில் இருக்கிறார். கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், அவருடைய படங்களை பார்த்து சினிமாவை கற்றுக் கொண்டதாக பல்வேறு பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சினிமா வாழ்க்கையில் அதிக வருமானம் பெற்ற திரைப்படமாக லியோ உள்ளது.

- Advertisement -

ட்ரிபிள் ஆர், பாகுபலி,கே ஜி எஃப் போல் லியோ பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய 37வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

- Advertisement -

தற்போது படக்குழுவினர் காஷ்மீரில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் முன்னிட்டு லியோ படத்திலிருந்து ஏதேனும் போஸ்டர் அல்லது வீடியோ வருமா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சூட்டிங் தளத்தில் கேக் வெட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று லோகேஷ் கனகராஜ் பிறந்த நாளை கொண்டாட உள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் லோகேஷ் கனகராஜ் தனது மகன் ,சகோதரன்,குடும்ப உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ள சஞ்சய் தத் லோகேஷ்க்கு இறைவன் நீண்ட ஆயுளையும், வெற்றியையும், அமைதியையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் கொடுக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார். உங்கள் வாழ்க்கை முழுவதும் நான் இருப்பேன் என்றும் சஞ்சய் தத் வாழ்த்தியுள்ளார்.

Most Popular