தமிழ் சினிமாவில் தற்போது இயக்குனர்கள் எல்லாம் நடிகர்களாக வலம் வரத் தொடங்கி விட்டார்கள். பாக்கியராஜ் ,பாண்டியராஜன், சுந்தர் சி , எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல இயக்குனர்கள் தற்போது ஹீரோக்களாக இருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் தற்போது லவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ் நடிகராக அறிமுகமாக உள்ளார். லோகேஷ் கனகராஜ் தற்போது லியோ படத்தில் மும்முரமாக பணியாற்றி வருகிறார். காஷ்மீரில் 52 நாட்கள் நடைபெற்ற சூட்டிங் பிறகு லியோ பட குழு சென்னைக்கு அண்மையில் திரும்பியது.
இந்த நிலையில் லியோ பட குழு 15 நாட்கள் பிரேக் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் தனது ஓய்வு நேரத்தை பயன்படுத்திக் கொண்ட லோகேஷ் கனகராஜ், ஆர் ஜே பாலாஜி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள சிங்கப்பூர் சலூன் படத்தில் ஆர் ஜே பாலாஜி முடி திருத்தும் நபராக நடிக்கிறார்.
இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. இந்த படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டுள்ளார். இந்தப் படத்தில் முக்கிய காட்சி எடுக்கப்பட்டது. இதில் ஆர் ஜே பாலாஜி சலூனில் பணியாற்றும் கலைஞர் ஆகவும் அப்போது முடிவட்ட லோகேஷ் கனகராஜ் வருவது போலவும் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் ஆர் ஜே பாலாஜி செய்கையை பிடித்து போய் லோகேஷ் கனகராஜ் வாய்ப்பு கொடுப்பது போல் காட்சிகள் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே மாஸ்டர் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருக்கிறார். தற்போது முதல் முறையாக வெளியேக்குனர் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்திருப்பதற்கு குறிப்பிடத்தக்கது.