Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாலியோவில் இரண்டாம் பாதி காட்டு மொக்கை.. லோகேஷ் கனகராஜ் செய்த தவறுகள்.. !

லியோவில் இரண்டாம் பாதி காட்டு மொக்கை.. லோகேஷ் கனகராஜ் செய்த தவறுகள்.. !

லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான லியோ நேற்று உலகெங்கும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸை அதிர வைத்து வருகிறது. இந்த வருடம் 1000 கோடி வசூல் செய்த பத்தான், ஜவான் இரு படங்களின் முதல் நாள் வசூலையும் முறியடித்து 148 கோடிகள் அள்ளியுள்ளது.

- Advertisement -

இது ஒரு பக்கம் இருக்க விமர்சன ரீதியாக லோகேஷ் கனராஜ் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளார். இது பெரிய ஷாக்கை கொடுத்துள்ளது. கைதி, விக்ரம் போன்ற பக்காவான அதிரடிப் படத்தை எடுத்தவரா இதை எடுத்தார் என்ற சந்தேகத்தை ஒரு நிமிடம் லியோ கொடுத்துவிட்டது.

பட துவக்கத்திலேயே ‘ து ஹிஸ்டரி ஆப் வயன்லன்ஸ் ’ திரைப்படத்தை மையமாக கொண்டது என அறிவித்துவிட்டு தான் படத்திற்குள்ளேயே சென்றனர். முதல் பாதி தாறுமாறாக அமைந்தது. குறிப்பாக ஹயனா சண்டை, காஃபி கடை சண்டை மற்றும் மார்கெட் சண்டை என அதிரடியான காட்சிகள்.

- Advertisement -

இடைவேளைக்கு முன் அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத்தை அறிமுகம் செய்யும் காட்சி, அதற்கு இணையாக பேடாஸ் பாடலுடன் விஜய் ‘ ப்ளடி ஸ்வீட் ’ சொல்லும் போது தியேட்டரே அதிரியது. இது தவிர முதல் பாதியில் சாண்டி மாஸ்டர் நடிப்பும் மற்றும் கைதியில் கலக்கிய ஜார்ஜ் மரியம் என மற்ற சில அருமையான காட்சிகளும் இடம் பெற்றன.

- Advertisement -

இத்தகு சிறப்பான படத்தை மொத்தமாக கவிழ்த்தது இரண்டாம் பாதி. இரு வில்லன்களுக்கும் சரியான பின்கதை இல்லை. ஏன் முதல் பாதியில் கரியர் சிறந்த நடிப்பைக் காட்டிய பார்த்திபன் கதாபாத்திரத்தின் முன் கதையான லியோ தாஸ் கதாபாத்திரமும் வேகாதது போல் இருந்தது.

ஃப்ளாஷ்பேக் மிகவும் மோசம். நரபலி எனும் மையத்தைச் கொண்டது பெரிதும் ஈர்க்கும் விதமாக இல்லை. மேலும் தாஸ் சகோதரர்கள் விஜய்யிடம் ‘ நீ தான் லியோ என ஒத்துக்கோ ’ எனும் மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை கூறுவது படத்திற்கு எந்த விதத்திலும் பொருந்தவில்லை.

அவர்கள் ஏன் மீண்டும் தேடி வருகிறார்கள் எனக் கூட தெரியவில்லை. கார் சேஸ் சண்டைக் காட்சி ஏதோ வீடியோ கேம் போல அமைக்கப்பட்டிருந்தது. கைதி படத்தில் அவ்வளவு தரமான லாரி ஆக்க்ஷன் காட்சியை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் இது போலச் செய்தது பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

அனைத்தையும் விட மன்னிக்க இயலாதது ஹரால்ட் தாஸ் கதாபாத்திரத்தை வீனாக்கியது தான். யுனிவர்ஸ் என்பதால் அவரைக் கொள்ளாமல் பின்வரும் படங்களில் பயன்படுத்தி இருந்தால் கூட தரமான முடிவாக இருந்து இருக்கும். எல்.சி.யூ கனெக்ட் என படத்தில் தொடர்பை உண்டாக்குவது மோசமான இரண்டாம் பாதியால் பெரிதும் கொண்டாட முடியும் மனதைக் கொடுக்கவில்லை.

இசையில் அனிருத் சொதப்பிவிட்டார். ஒரு பெரிய படத்திற்கு தேவையான உழைப்பை போடவே இல்லை. குறிப்பாக ஆன்டனி தாஸ் இசையில் சத்தம் காதைக் கிழித்தது, இடையில் அவர் பேசியது கூட சரியாக கேட்கவில்லை. மக்கள் அதிகம் போற்றும் லோகிவர்ஸ் 2.0 இசையில் அடுத்தடுத்து பாடல்களை மிக்ஸ் செய்தது தவிர ஸ்பெஷலான விஷயம் ஒன்றுமில்லை.

லியோவில் செய்த தவறுகளை சரி செய்துக் கொண்டு கைது 2 படத்தில் மீண்டும் எல்.சி.யூவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் அவர் கவனம் செலுத்துவது அவசியம். குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளும் மனம் கொண்ட இயக்குனர் என்பதால் அவரின் அடுத்த படம் நிச்சயம் தரமாக அமையும் எனவே எதிர்பார்க்கலாம்.

Most Popular