தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்காக காஷ்மீரில் 52 நாட்கள் கடும் குளிரில் படப்பிடிப்பை நடத்தினார்கள். இதனை அடுத்து லியோ படக் குழு சென்னை வந்தடைந்தார்கள்.
இந்த நிலையில் அடுத்த செடியூல் சென்னையில் ஏப்ரல் 10ஆம் தேதிக்கு மேல் தொடங்க உள்ளது. தற்போது லியோ பட குழுவினர் ஓய்வில் இருந்து வருகிறார்கள். இந்த வேலையில் சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக லோகேஷ் கனகராஜ் பங்கேற்றார். அதில் ரசிகர்கள் லியோ குறித்து அப்டேட் கேட்டனர்.
அப்போது பேசிய லோகேஷ் கனகராஜ் லியோ, ஒரு சிறந்த ஆக்சன் படமாக விளங்கும் என்று கூறினார். இதில் தளபதி முழுக்க முழுக்க ஆக்சன் அவதாரத்தின் நடித்திருப்பதாகவும், படம் சிறப்பாக வந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். தற்போது படத்தின் சூட்டிங் 60 நாட்கள் முடிவடைந்து விட்டதாகவும், இன்னும் 60 நாட்கள் எடுக்க வேண்டிய உள்ளதால் அதற்கான பணிகள் தொடங்கி விடும் என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.
படத்தின் ஷூட்டிங் முடிந்தவுடன் அப்டேட்ஸ்கள் கண்டிப்பாக வரும் எனவும் லோகேஷ் உறுதி அளித்தார். லோகேஷின் இந்த பேட்டி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் ரிலீசுக்கு முன்பே அதிக வருமானத்தை பெற்ற திரைப்படமாக லியோ விளங்குகிறது. தெலுங்கு மற்றும் கன்னடம் சினிமாவில் கூட ஆயிரம் கோடி ரூபாய் வசூலை குவித்த திரைப்படம் வெளியாகிவிட்டது .
ஆனால் தமிழ் சினிமாவில் இன்னும் அந்த சாதனை தொடப்படவில்லை. இதனால் லியோ திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் என்ற மைல் கல்லை தொடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கு விஜய் உள்ளிட்ட பிரபலங்கள் ஹிந்தி தெலுங்கு போன்ற மொழிகளில் ப்ரமோஷன் செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.