Friday, April 26, 2024
- Advertisement -
Homeசினிமாலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி.. விரைவில் பேச்சுவார்த்தை

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி.. விரைவில் பேச்சுவார்த்தை

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தனது கடைசி படமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ரஜினிகாந்த் ஜெய்லர் என்ற படத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் முடிந்தவுடன் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் மே மாதம் இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் ஜெய் பீம் இயக்குனர் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார். இதன்பிறகு தனது கடைசி படத்தை மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ரஜினிகாந்த்,கமல், விஜய் வைத்து பிரம்மாண்ட ஹிட்டுகளை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

- Advertisement -

இதற்கு லோகேஷ் கனகராஜ் ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் இருவரும் சந்தித்து கதை குறித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ரஜினிக்கு கதை பிடித்து விட்டால் இருவரும் தங்களுடைய ப்ராஜெக்ட் முடித்த பிறகு இணைய உள்ளார்கள். மேலும் இந்த படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ரஜினி நடிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தங்களுடைய சினிமா வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருப்பதால் கடைசியாக ஒருமுறை இணைந்து படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் மேடையில் இருவரும் நல்ல கதை இருந்தால் இணைந்து நடிப்போம் என்று கூறியதை அடித்து இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே லோகேஷ்  ஒரு மேடையில் ரஜினியை வைத்து படம் எடுப்பது என்றால் தளபதி படத்தை போல் ஒரு கதையை தயார் செய்வேன் என்று கூறியிருந்தார். அது தற்போது நடக்க அதிக வாய்ப்பு உள்ளன.

Most Popular