சினிமா

விக்ரம் யூனிவர்சில் தளபதி விஜய் ? முக்கிய அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் !

Vijay and Lokesh Kanagaraj

தமிழ்நாட்டின் திரையரங்கு வரலாற்றில் அதிக வசூல் இட்டிய திரைப்படம் என்ற சாதனையை கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் படைத்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 170 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. ஹாலிவுட்டில் மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற கதைக்களம் மிகவும் பிரபலமானது. அதாவது மார்வெல் திரைப்படங்கள் அனைத்தும் ஒன்றுக்கு ஒன்றுடன் தொடர்பில் இருக்கும்.மார்வெல் திரைப்படத்தில் வரும் ஹீரோக்கள் அந்தந்த கதை களத்திற்கு ஏற்ப மற்ற திரைப்படங்களிலும் தோன்றுவார்கள்.

ஆனால் இப்படி ஒரு முயற்சியை கோலிவுடில் முதல்முறையாக கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் .அதாவது தாம் எடுத்துள்ள கைதி திரைப்படத்தையும் விக்ரம் திரைப்படத்தையும் ஒரே டைம் லைனில் கதை வருவது போல் அவர் உருவாக்கியுள்ளார். இதனை ரசிகர்கள் எல். சி.யு என்று போற்றி வருகின்றனர் . தற்போது வரை எல்சியு வில் நடிகர் கமல் ,சூர்யா, விஜய் சேதுபதி ,கார்த்தி,பகத் பாசில் ஆகியோர் இணைந்துள்ளனர். விக்ரமின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜயை வைத்து லோகேஷ் கனகராஜ் அதிரடி ஆக்சன் படத்தை இயக்க உள்ளார்.

இது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் தமது அடுத்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் முறைப்படி அறிவிப்பு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் அடுத்த படத்தை தாம் இயக்குகிறேனா என்று எனக்குத் தெரியாது ஆனால் தமது அடுத்த படத்தில் விஜய் அண்ணாவை வைத்து தான் இயக்க இருக்கின்றேன் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார் . அந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இடம்பெறுமா இல்லையா என்பது படம் அறிவிப்பு வெளியான அன்றே தெரியவரும் என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். ஒருவேளை நடிகர் விஜயின் அந்த திரைப்படம் விக்ரம் கதைகளத்தில் இணைந்தால் தமிழ் சினிமாவின் புது முயற்சியாக முன்னணி நடிகர்கள் அனைவரும் ஒரே படத்தில் தோன்ற வாய்ப்பு ஏற்படும்.

நடிகர் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் . அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு தான் லோகேஷ் கனகராஜன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும். மாஸ்டர் திரைப்படம் அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அந்தப் படம் மாபெரும் ஹிட்டானதால் மாஸ்டர் தொடங்கிய அதே நாளில் தளபதி 67 திரைப்படமும் தொடங்கும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top