Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஎல்.சி.யூ போல இங்கேயும் போதைப் பொருட்கள் தரமான சண்டை.. விஜயகுமாரின் பைட் கிளப் திரை விமர்சனம்

எல்.சி.யூ போல இங்கேயும் போதைப் பொருட்கள் தரமான சண்டை.. விஜயகுமாரின் பைட் கிளப் திரை விமர்சனம்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்தப் படிக்கு சென்று தயாரிப்பாளராக உருவெடுத்துள்ளார். ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் முதல் படமாக தன் நண்பர் விஜயகுமாரின் ‘ பைட் கிளப் ’ படத்தை எடுத்து ரீலீஸ் செய்துள்ளார். உலகெங்கும் பெரிய ரிலீசாக இது அமைகிறது. ரீலீஸ் செய்ய மிகவும் சிரமப்பட்டு வந்த விஜயகுமாருக்கு சரியான சமயத்தில் உதவி செய்துள்ளார் லோகேஷ்.

- Advertisement -

அப்துல் ரஹ்மாத் இயக்கத்தில் விஜயகுமார், கார்த்திகேயன், அவினாஷ் ரகுதேவன், மோனிஷா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜயகுமாரின் உறியடி படத்தைப் போலவே இளைஞர்களுக்கு இடையே நடக்கும் அதிரடியான சண்டை தான் படமே.

இன்று வெளியான இத்திரைப்படம் அதிகபட்சமாக நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ளது. எனினும் சிலர் சற்று குறைவாக சொல்கின்றனர். கதாநாயகனாக வரும் விஜயகுமார் கால்பந்து வீரராக வேண்டும் எனும் லட்சியத்தில் உள்ளார். அவரது ஆசான் ஒரு நாள் கொலை செய்யப்பட அதனைத் தொடர்ந்து வரும் சண்டைகள் தான் படத்தின் கதை.

- Advertisement -

ஒவ்வொரு சண்டைக்கும் இடையே அதற்க்கு ஏற்ற ஃப்ளாஷ்பேக் கூறப்படுகிறது. படம் கதை அளவில் சுமாராக இருந்தாலும் தொழில்நுட்ப வகையில் தரமாக வந்துள்ளது. சண்டைக் காட்சிகள், எடிட்டிங் சிறப்பாக உள்ளது. கோவிந்த் வசந்த் இசைத் துறையில் அவரது பணியைப் பக்காவாக செய்துள்ளார். அவரது பின்னணி இசையில் சண்டைக் காட்சிகள் அடுத்தக் கட்டத்திற்கு செல்கிறது.

- Advertisement -

படத்தின் இறுதியில் சொல்லியே ஆக வேண்டும் என சமூக அறிவுரையைக் கூறாமல் படத்தின் போக்கிலேயே அதை நமக்கு உணர்துகுறார்கள். இந்தப் படத்திலும் சரக்கு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவறு எனவும் அதற்க்கு பின் வரும் விளைவும் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் தன் எல்.சி.யூ படங்களில் போதைப் பொருட்கள் இல்லா சமுதாயம் என்பதை சொல்வதோடு இல்லாமல் படத்தை தயாரித்தும் அதனை நமக்கு உணர்த்துகிறார்.

ஆக்ஷன் படங்களை விரும்பி பார்க்கும் நபர்கள் திரையங்கில் நல்ல விருந்தை எதிர்பார்த்து சென்று மகிழலாம்.

Most Popular