இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன் யுனிவர்சில் மூன்றாவது படமாக லியோவை இணைத்துள்ளார். விஜய் நடிப்பில் உருவான இத்திரைப்படம் உலகளவில் 600 கோடிகளை வசூலித்துள்ளது. அண்மையில் வெற்றிவிழாவை மிகவும் கோலாகலமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்தியது படக்குழு.
நிகழ்ச்சியில் படகுழுவைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்றனர். வழக்கம் போல தளபதி விஜய் தன் குட்டி ஸ்டோரியுடன் சில கலகலப்பான வார்த்தைகளையும் பகிர்ந்தார். திரிஷா, அர்ஜுன், மிஷ்கின் என மற்றவர்களும் மேடை ஏறி பேசினர். அனிருத் வெளியூரில் இருப்பதால் அவர் பங்கேற்கவில்லை.
படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசிய போது புதியதோர் சுவராஸ்யமான தகவலை ஒன்றைப் பகிர்ந்தார். அவர், “ இயக்குனர் வெற்றிமாறனை எனது படத்தில் வில்லனாக நடிக்கவைக்க முயற்சித்தேன். ” என்றார். யாரும் எதிர்பார்க்காத கோனலில் லோகேஷ் கனகராஜ் திடீரென இதனைக் கூறினார்.
மேலும், “ நான் எனது 2 – 3 படங்களில் இயக்குனர் வெற்றிமாறனை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் அதற்கு ஒத்துக்கவில்லை. அவரை ஓர் நடிகனாகப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் என நம்புகிறேன். ” என்றார் லோகேஷ் கனகராஜ்.
இது தவிர லியோ படம் குறித்து அவர் நிறைய பேசினார். “ லியோ படம் துவங்கி முடிக்கும் வரை அதற்கு எந்தவித நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. இசை வெளியீட்டு விழா நடக்காதது வருத்தம். அதற்க்கு ஈடுகட்டும் வகையில் வெற்றிவிழாவில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. லியோ படத்தின் இறுதி எடிட்டிங் முடிந்த பின் விஜய் அண்ணா பார்த்துவிட்டு என்னை அனைத்து முத்தமிட்டார். எனக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. லவ் யூ ணா. ” எனக் கூறினார்.
அதனுடன் தன்னோடு பணியாற்றிய துணை இயக்குனர்கள் மற்றும் மற்ற சிலவர்களை மேடைக்கு அழைத்து கவுரவித்தார். தலைவர் 171 படத்தை முடித்தப் பின் உடனே கைதி 2 படத்தையும் லோகேஷ் துவங்கவுளள்ளார். ஜனவரி மாதமே ஆரம்பிக்க வேண்டிய படம் ரஜினிகாந்தால் தள்ளிப் போய் உள்ளது.