தமிழ் சினிமாவின் மிக முக்கிய மற்றும் பிஸியான இயக்குனராக உயர்ந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். எடுத்த 4 படங்களும் சூப்பர் ஹிட். அதுமட்டுமில்லாமல் கைதி, விக்ரம் படத்தை வைத்து தனக்கென்று ஓர் யுனிவர்ஸையும் உருவாக்கியுள்ளார். அவரின் இயக்கதில் நடிக்க மிகப் பெரிய ஸ்டார் காத்திருக்கிறார்.
நடிகர் விஜய்யுடன் லியோ படம்
மாஸ்டர் படத்திற்குப் பின் இரண்டாவது முறையாக தளபதி விஜய்யுடன் இயக்குனர் லோகேஷ் கைகோர்த்துள்ளார். விஜய்யுடன் சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், அனுராக் காஷ்யப், மடோனா செபாஸ்டின், மன்சூர் அலி கான் என ஓர் நட்சத்திர பட்டாளமே கூடியுள்ளது.
கேஷ்மிரில் துவங்கிய ஷூட்டிங் சென்னை, கொடைக்கானல், ஹைதராபாத் என அடுத்தடுத்து முடிக்கப்பட்டது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை துவங்கவிருக்கிறது படக்குழு. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. எனினும் இத்திரைப்படம் எல்.சி.யூவில் வருகிறதா இல்லையா என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை.
லோகேஷ் கனகராஜின் அடுத்தத் திரைப்படம்
ஒருபக்கம் இயக்குனர் லோகேஷ் தன் யுனிவர்சி்ல் அடுத்தத் திரைப்படமான கைதி 2வை தொடங்கவிருக்கிறார் எனவும் மற்ற சிலர் பிரபாஸை வைத்து பேன் இந்தியா படம் செய்யவிருக்கிறார் எனவும் மாற்றி மாற்றி செய்திகள் வந்தது. ஆனால் உண்மையில் அவர் இணையவிருக்கும் அடுத்தப் பெரிய நட்சத்திரம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். லியோ படதிற்கிடயே அவரைச் சந்தித்து இது குறித்து பேசியுள்ளார்.
இந்த ஜோடி உறுதியாகி படத்தின் முதற்கட்ட பணிகளை துவங்கிவிட்டனர், இன்னும் இந்தச் செய்தி இன்னும் அதிகாரபூர்வமாக மட்டுமே அறிவிக்கப்படவில்லை. லோகேஷ் – ரஜினிகாந்த் பிராஜெக்ட் குறித்து லியூவில் நடிக்கும் மிஷ்கின் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கூட சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கிரிப்ட் பணிகளைத் துவங்கிய லோகேஷ் கனகராஜ்
மேலும் இந்தத் திரைப்படம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் எனவும் செய்திகள் பரவின ஆனால் அதை பலர் மறுத்துள்ளனர். லியோ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் விரைவில் துவங்கவிருக்கிறது. அதற்கு முன் இருக்கும் நேரத்தை வீணாக்காமல் அடுத்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டில் போட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பரும் இயக்குனருமான ரத்னகுமார் இன்று தன் சமூக வலைதளப் பக்கத்தில் லோகேஷுடன் எடுத்த செல்பியை பதிவிட்டு “ புதிய துவக்கம் ” எனக் குறிப்பிட்டுள்ளார். சினிமா டிராக்கர்கள் பலரும் இது ‘ தலைவர் 171 ’ என உறுதியாக சொல்கின்றனர்.