Tuesday, October 1, 2024
- Advertisement -
Homeசினிமாஇந்த 10 படங்களுக்கு பின் நான் ஓய்வு பெறுவேன்.. லோகேஷ் கனகராஜ் உறுதி.. !

இந்த 10 படங்களுக்கு பின் நான் ஓய்வு பெறுவேன்.. லோகேஷ் கனகராஜ் உறுதி.. !

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடப்பு கோலிவுட்டின் பெரிய அங்கமாக விளங்குகிறார். தளபதி விஜய்யை வைத்து இவர் இயக்கியுள்ள லியோ திரைப்படம் இன்னும் 10 நாட்களில் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் எதிர்பார்ப்புகளை வார்த்தைகளால் அடக்கிவிட இயலாது.

- Advertisement -

லியோ படத்தின் சென்சார் பணிகள் நிறைவு பெற்று டிரைலரும் வெளியாகிவிட்டது. இத்தனை வருடங்கள் காணாத வெறித்தனமான ஆக்க்ஷன் ஹீரோவாக விஜய் நடித்துள்ளார். லியோ படத்தின் புரோமஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரே நாளில் 5 நேர்காணல்களைக் கொடுத்துள்ளார்.

அதில் அவர் படத்தின் சில சுவராஸ்யமான செய்திகளைப் பகிர்ந்தார். நல்லது என்னவென்றால் ஸ்பாய்ளர்கள் எதுவும் அவர் கொடுக்கவில்லை. சினிமா பற்றிய ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சி ஒன்றில் சென்ற ஆண்டு, தான் 10 படங்கள் எடுத்துவிட்டு ஓய்வு பெறும் முடிவில் இருப்பதைக் கூறினார்.

- Advertisement -

அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவரின் இந்த முடிவைக் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர் மீண்டும் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “ நான் பத்து படங்கள் முடிந்த பின் அடுத்து வரும் இயக்குனர்களுக்கு வழி விட்டு விலகிக் கொள்வேன். ” இது சீரியஸான முடிவா எனக் மறுமுறை பரத்வாஜ் கேட்டபோது லோகேஷ், “ எனக்குப் பிடித்த இயக்குனர்கள் சிலர் இது போல் வெளியில் சொல்ல வேண்டாம் என அறிவுறுத்திருக்கிறார்கள். பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. ” எனக் கூறியுள்ளார்.

- Advertisement -

லோகேஷ் தன் அடுத்த படங்களின் பட்டியலையும் விவரித்துள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என இதுவரை ஐந்து படங்கள் முடிந்துள்ளன. தலைவர் 171 ஆறாவது படமாக அமைகிறது. கார்த்தியின் நடிப்பில் கைதி 2 நிச்சயம் 7வது படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெளிவாக சொல்லியுள்ளார்.

இது தவிர அடுத்து விக்ரம் 2 மற்றும் ரோலக்ஸ் படங்கள் பாக்கியுள்ளன. மேலும் தான் இப்போது வரை இயக்கும் படங்கள் அனைத்திற்கும் 6 – 7 வருடங்கள் முன்பே கதை எழுதிவிட்தாகவும் குறிப்பிட்டார். அதில் தலைவர் 171 படமும் அடங்கும். அது மட்டுமில்லாமல் அவர் எழுதிய பல கதைகளை தற்போது தன் துணை இயக்குனர்களுக்கு வழங்கி வருவதாகவும் கூறினார்.

எல்.சி.யூ தவிர லோகேஷ் இயக்க மிகவும் விருப்பப்படும் பத்ம இரும்புக்கை மாயாவி. இவரின் இரண்டாவது படமாக இது அமைய வேண்டியது. சூர்யாவை வைத்து வரும் காலத்தில் நிச்சயம் லோகேஷ் இந்தப் படத்தைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 10 படங்கள் தவிர பிரபாஸ் அவர்களுடன் ஒரு படம் செய்யவும் திட்டம் உள்ளது. அதனால் அவர் 10 படங்கள் எனக் கூறுவது வெறும் எண் தான். அது நிச்சயம் மாறலாம்.

Most Popular