தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமாக விளங்குவது லைக்கா. பல வெற்றி படங்களை கொடுத்துள்ள லைக்கா நிறுவனம் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கிருக்கிறது. பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் டு ஆகிய படங்களை லைக்கா தயாரித்ததன் மூலம் சுமார் 800 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது.
மேலும் துணிவு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் கைப்பற்றியது. இந்த திரைப்படம் வெளிநாட்டில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறி வெளிநாட்டில் இருந்து பணத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக தற்போது புகார் எழுந்துள்ளது.
இது குறித்து வருமான வரித்துறை மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லைகாவுக்கு சொந்தமான 10 இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அஜித்தின் அடுத்த திரைப்படத்தையும் லைக்கா நிறுவனமே தயாரிக்க உள்ளது.
இந்த படம் இம்மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. ஆனால் தற்போது இந்த ரெய்டு காரணமாக லைக்கா நிறுவனத்தின் பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் எந்த படத்தையும் வெளியிட முடியாத நிலையில் லைக்கா இருக்கிறது. மேலும் புதிய படத்தையும் தொடங்க முடியாத சூழலும் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் நடிகர் அஜித்தின் 62 ஆவது படம் தொடங்குவதில் தாமதம் ஆகி உள்ளது ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் அளவு ஏப்ரலில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அஜித்தின் தந்தை காலமானது துரதிர்ஷ்டவசமாக படத்தை தள்ளிப் போட வைத்தது. மேலும் நடிகர் அஜித் பைக் பயணத்தை தொடங்கியதால் மேலும் தல 62 படம் தாமதமானது.