Friday, March 29, 2024
- Advertisement -
Homeசினிமாசோழன் வருகிறான் ! பாகுபலியை மிஞ்ச வரும் பொன்னியின் செல்வன் - வெளியானது புதிய அப்டேட்

சோழன் வருகிறான் ! பாகுபலியை மிஞ்ச வரும் பொன்னியின் செல்வன் – வெளியானது புதிய அப்டேட்

இந்திய சினிமாவில் பாகுபலி மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. இதுவரை எடுக்கப்பட்ட படத்தில் அதிக வசூல் சாதனையை பாகுபலி மேற்கொண்டது. ஒரு காலத்தில் தமிழ் சினிமா கொடி கட்டி பறந்தது. ரஜினியின் சிவாஜி , எந்திரன், கமல் நடித்த இந்தியன் ,அபூர்வ சகோதரர்கள் போன்ற திரைப்படங்கள் நாடு தழுவிய அளவில் அதிக வசூலை ஈற்றி சாதனை படைத்தன. ஆனால் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு மற்றும் கன்னட சினிமாக்கள் கோடிகளை வாரி வசூலை ஈட்டு வருகின்றன . அண்மையில் வெளியான ஆர் ஆர் ஆர் , கே ஜி எஃப் 2 ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடி வசூலை ஈட்டின.

- Advertisement -

ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு படைப்பு இதுவரை வெளியாகவில்லை. இயக்குனர் சங்கர் உருவாக்கிய 2.0 திரைப்படம் பாகுபலி சாதனை உடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த திரைப்படம் 700 கோடியை மட்டுமே வசூல் செய்தது . அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடி வசூலை பெற்றுள்ளது. தெலுங்கு கன்னட சினிமாக்கள் ஆயிரம் கோடி வசூலை பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் எப்போது அப்படி ஒரு திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தான் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளன.

இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விக்ரம் , கார்த்தி, ஜெயம் ரவி போன்ற நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர் . திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார் , ஜெயராம் போன்ற பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர் . சுமார் 500 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடி என்ற கனவை ps2 படைக்கும் என்ற ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். பாகுபலி, கே ஜி எஃப் 2, ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் நாடு முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டன . ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இதுவரை விளம்பரம் செய்யப்படவில்லை என்று தமிழக ரசிகர்கள் ஏக்கத்தில் இருந்தனர் .

- Advertisement -

பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழ தேசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்று காவியம் என்பதால் இந்த படத்தின் டீசரை தஞ்சையில் வெளியிட இந்த படக்குழு திட்டமிட்டது . ஆனால் அதுவும் நடைபெறவில்லை . இந்த நிலையில் சோழன் வருகிறான் என்று பொன்னியின் செல்வன் முதல் பாகத்திற்கான மோஷன் போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளது. இதனால் தமிழக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். செப்டம்பர் மாதம் இறுதியில் தொடர் விடுமுறையை மையமாக வைத்து இந்த படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

படத்திற்கான ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால் முழு வீச்சில் விளம்பரப் பணியை மேற்கொள்ள தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரைப்படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளி வருகின்றன இதனால் படத்தை நான்கு மாநிலங்களிலும் ப்ரோமோஷன் செய்ய பட குழு திட்டமிட்டுள்ளது.

Most Popular