Sunday, May 5, 2024
- Advertisement -
Homeசினிமாஇது என்னய்யா அஜித்துக்கு வந்த சோதனை?? அஜித்துக்கு மாமன்னான வடிவேலு!

இது என்னய்யா அஜித்துக்கு வந்த சோதனை?? அஜித்துக்கு மாமன்னான வடிவேலு!

பி வாசுவின் இயக்கத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்தது மட்டுமில்லாமல், அனைவரின் எதிர்பார்ப்பையும் ஒட்டுமொத்தமாக பூர்த்தி செய்த படம் சந்திரமுகி.

- Advertisement -

சூப்பர் ஸ்டாரின்  மணி மகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக பதிந்திருக்கும் படம் சந்திரமுகி .பிரபு ,ஜோதிகா, நயன்தாரா, நாசர் ,வினித் போன்ற நட்சத்திர பட்டாளங்கள்  பலர் குழுமி இருந்த இப்படம் உச்சத்தை தொட்டதற்கு வைகைப்புயல் வடிவேலுவின் நகைச்சுவையும் ஒரு காரணம்..

சந்திரமுகி திரைப்படத்தில் ஒருவர்  மனதில் நினைத்ததை எல்லாம் அப்படியே சொல்லும் வல்லமை பெற்றவராக ரஜினியின் கதாபாத்திரம் அமைந்திருக்கும் வடிவேலு தன் மனைவியை ரஜினியிடம் இருந்து காப்பாற்ற போராடும் காட்சிகள் குபீர் சிரிப்பை குப்பென்று  வரவழைக்கும்.

- Advertisement -

அனைவரையும் சிரிப்பொலியில் மூழ்கடித்த வைகைப்புயல் வடிவேலு சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் அலப்பறையை கூட்டி உள்ளாராம்..
சந்திரமுகி 2 படத்தில் ரஜினிகாந்துக்கு பதில் இயக்குனர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார் இவரும் நகைச்சுவையில் சளைத்தவர் அல்ல!

- Advertisement -

இவருடைய முந்தைய படமான முனி, காஞ்சனா படங்களில் பிச்சு உதறி இருப்பார். இரவு நேரங்களில் கழிவறைக்கு செல்ல பயந்து கழிவறைக்கு ஒரு காவலரை போட்ட பெருமை இவரை சாரும் !!
ஜோதிகாவுக்கு பதில் கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார்.

இவர் திரைப்படங்களில் மட்டுமல்ல பொது வாழ்விலே அறிக்கைகள் விடுவதில் சந்திரமுகி ஆகவே திகழ்பவர்.!

இப்படி சந்திரமுகி 1 படத்தில் பல நட்சத்திரங்களுக்கு பதில் இணையாக மற்ற நட்சத்திரங்கள் நடித்திருக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 19ஆம் தேதி வெளிவர தயாராகிவிட்டது.
ஆனால் வைகைப்புயல் வடிவேலின் கதாபாத்திரத்துக்கு மட்டும் வேறு யாரும் நடிக்காமல்  நகைச்சுவை மாமன்னான வடிவேலுவே இப்படத்திலும் நடித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியாகவே ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

ஒரு நடிகர் ஒரு வருடத்திற்கு மேல் நடிக்காமல் போனாலே மறந்துவிடும் ரசிகர்களுக்கு மத்தியில் ,பத்து வருடம் திரையில் நடிக்காமல் இருந்தாலும் , மீம்ஸ்களிலேயே மனதை கொள்ளை கொண்டவர் வடிவேலு.. அந்த அளவுக்கு வடிவேலுவின் சாயல் இல்லாத மீம்ஸ்களே கிடையாது. ஒன்று அவருடைய வசனங்கள் இருக்கும் இல்லையென்றால் அவருடைய ஈடு இணை இல்லாத முகபாவனைகள் இடம்பெற்று இருக்கும்.

நகைச்சுவையையும் வடிவேலு வையும் தமிழும் புகழும் போல பிரிக்க முடியாது என்றால் அது மிகை இல்லை.சந்திரமுகி 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா ,முழுவதுமாக இப்படத்தை பார்த்து விட்டு , அதில் ராகவா லாரன்ஸும் வடிவேலும் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் நிச்சயம் மக்களை ஒரு வழி படித்தி விடும் !! என்று மகிழ்ச்சியின் எல்லையில் இருக்கிறார்களாம்.

அதுமட்டுமில்லாமல் இப்பொழுதே படத்தின் வெற்றி கண்முன்னே தெரிவதால்,  தாமே படத்தை வெளியிடவும் முடிவு செய்து இருக்கிறார்களாம்!!!
இதற்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம் ?என்றால் அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சியை இந்த லைக்கா நிறுவனம்தான் தயாரிக்கிறது..

சந்திரமுகி 2 படத்தின் வசூலை வைத்தே  விடாமுயற்சியை விஸ்வரூபமாக எடுத்து முடித்து விடலாம் என்று நம்பிக்கையுடன் விடாமுயற்சியை தயாரிக்க, முழுமூச்சாக லைக்கா நிறுவனம் ஆயத்தமாகிவிட்டார்களாம்.

Most Popular