Friday, May 3, 2024
- Advertisement -
Homeசினிமாஜோல்னா பையில் விளம்பரம்.. உள்ளே என்ன இருக்குது தெரியுமா.. ? மாவீரன் படக்குழுவை கலாய்க்கும் நெட்டிசென்கள்.....

ஜோல்னா பையில் விளம்பரம்.. உள்ளே என்ன இருக்குது தெரியுமா.. ? மாவீரன் படக்குழுவை கலாய்க்கும் நெட்டிசென்கள்.. !

மண்டேலா பட மற்றும் தேசிய விருது இயக்குனரான மடோன் அஸ்வினின் தலைமையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதித்தி ஷங்கர் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் மிஷ்கின் நடிக்கிறார்.

- Advertisement -

மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது. இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில் படக்குழு புரொமோஷன் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அண்மையில் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டனர்.

மாவீரன் டிரெய்லர்

ஜூலை 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மாவீரன் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. அரசியல்வாதிகளும் சாதாரண மக்களின் ஒருவனுக்கும் இடையே நடக்கும் பிரச்சினை தான் கதைக்களம். இதில் ஃபேன்டசியைக் கலந்து நகைச்சுவைப் படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் அஷ்வின்.

- Advertisement -

டிரெய்லரைப் பார்த்தப் பின் பலர் குழப்பத்தில் இருக்கிறார்கள். கிடைத்த தகவல்களின் படி, இப்படத்தில் சிவகார்த்திகேயன் வரையும் ஓவியங்கள் அடுத்து நடக்கும் சம்பவங்கள் எனத் தெரிகிறது.

- Advertisement -

மாவீரன் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி

இந்த டிரெய்லர் வெளியீடு பெரிய நிகழ்ச்சியாகவும் நடத்தப்பட்டது. அதில் படக்குழு கலந்து கொண்டு பேசினர். தன் அடுத்த படத்தின் லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன் வந்திருந்தார். நிகழ்சியில் பங்கேற்ற ரசிகர்களுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவீரன் என அச்சிடபட்டிருக்கும் ஒரு பையில் இரவு உணவும் கொடுத்துள்ளார்கள். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த செயலளுக்கு பாராட்டுகள் ஒரு பக்கம் வந்தாலும் எப்போதும் போல நகைச்சுவைக்காக நெட்டிசன்கள் ஜோல்னாபை விளம்பரம் என கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பெரிய நில்கழ்சிகளில் உள்ளே செல்லும் ரசிகர்களுக்கு 4 – 5 மணி நேரம் எந்த உணவுக் பெரும்பாலும் கிடைக்காது. அப்படியே அங்கு இருந்தாலும் பெரிய விலையிலயே விற்கப்படும். மாவீரன் படக்குழுவினரின் இந்த செயல் பாராட்டப்பட வேண்டியது.

Most Popular