Saturday, April 20, 2024
- Advertisement -
Homeசினிமா" மிரட்டி விட்டடிருக்காங்க" சூர்யா 42 குறித்து  அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி

” மிரட்டி விட்டடிருக்காங்க” சூர்யா 42 குறித்து  அப்டேட் கொடுத்த மதன் கார்க்கி

- Advertisement -

சூர்யா திரைப்படம் வாழ்க்கையில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் படம் தான் சூர்யா 42. இந்தப் படத்திற்கான பெயர் இதுவரை அறிவிக்கப்படவில்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பத்து மொழிகளில் இந்த படம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவாவின் கனவு திரைப்படம் ஆக இது உள்ளது. இந்த நிலையில் சூர்யா 42 குறித்து பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி பேசியிருக்கும் வீடியோ சூர்யா ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் தாம் சூர்யா 42 படப்பிடிப்பு நடைபெறும் தளத்திற்கு சென்றதாகவும், அங்கு படப்பிடிப்பு நடைபெறும் காட்சிகளை பார்த்து தான் மிரண்டு போய்விட்டதாக கூறியுள்ளார். மேலும் திரைக்கதையில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அதை அப்படியே காட்சியாக மாற்றி இருப்பதாகவும் மதன் கார்கே பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் படம் மிரட்டலாக வந்திருப்பதாகவும் மதன் கார்க்கி குறிப்பிட்டிருக்கிறார். இதேபோன்று சூரியா 42 திரைப்படம் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோரின் திரைப்பட வாழ்க்கையில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமையும் என்று கூறியுள்ளார்.

படம் சிறப்பான முறையில் தயாராகி வருவதால் இம்முறை சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் இருப்பதாக மதன் கார்க்கி கூறியிருக்கிறார். சிறுத்தை சிவா உடன் படத்தின் வசனத்திற்காக தாம் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் மதன் கார்க்கி கூறியுள்ளார்.

சூர்யா 42 படத்தை பார்த்தால் இது சிறுத்தை சிவா படம் போல் இருக்காது என்றும் இது மிகவும் வித்தியாசமான ஒரு கதை கொண்டு எடுக்கப்பட்டு இருப்பதாகவும்,இது நிச்சயம் மக்களுக்கு பிடிக்கும் என்றும் மதன் கார்க்கி கூறியுள்ளார்.

இந்தப் படத்தில் மதன் கார்க்கி வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி வருகிறார். தற்போது சூர்யா 42 படத்திற்கான ப்ரோமோ வீடியோ தயாராகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி சூர்யா 42வின் ப்ரோமோ ரிலீஸ் ஆகும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular