தற்பொழுது சினிமா நட்சத்திரங்களை போல பிரபலம் ஆகி இருக்கும் நபர் என்றால் நினைவுக்கு வருவது மாதம் பட்டி ரங்கராஜ் . பிரபலங்களின் இல்ல நிகழ்வுகளிலும் ,பிற நிகழ்ச்சிகளிலும் சமையல் கலைஞராக விளங்குகிறார்.
பாரம்பரிய உணவுகளை பிரத்யோகமாக சமைத்து பரிமாறுவதில் இவர் மிகப்பெரிய ஸ்டார் ஆகி விட்டார் .இவர் 2019ல் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது .இதைத்தொடர்ந்து 2020ல் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண் குயின் திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருடைய தந்தை மாதம் பட்டி தங்க வேலு இவர் ஒரு சமையல் காரர் . தற்பொழுது பிரபலங்களுக்கு சமையல் கலைஞராக இருந்து பிரபலம் அடைந்திருக்கும் மாதம் பட்டி ரங்கராஜ் ஒரு இன்ஜினியர்.
ஆனால் தற்பொழுது இவர் சமையல் கலைஞராகி இதுவரை 400 திருமணங்களுக்கு மேல் சமைத்திருக்கிறார் .இதில் பல பிரபலங்களின் திருமணங்களும் அடங்கியுள்ளது. நடிகர் கார்த்திக்கின் திருமணம் ,நடிகர் யோகி பாபுவின் மகளின் பிறந்தநாள், பிரபல மருத்துவர் டாக்டர் சிவராமனின் மகள் திருமணம் என்று முக்கியமான பல நிகழ்வுகளில் சமைத்திருக்கிறார் மாதம் பட்டி ரங்கராஜ்
இவர் தற்பொழுது ஒரு நிகழ்ச்சியில் தான் எப்படி இந்த சமையல் தொழிலுக்குள் வந்தேன் என்பதை கூறி இருக்கிறார். அவர் கூறிய அந்த பதில் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. ஒரு தந்தைக்கு மகனாற்ற வேண்டிய கடமையை நிறைவேற்றிய மகனாக அவரை மக்கள் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்.
ரங்கராஜன் குழந்தை பருவத்தில் இருந்து தன்னுடைய தந்தை சமையல்காரர் என்று கூப்பிடுவதை வெறுத்திருக்கிறார். தன்னுடைய தந்தையின் உணவு எவ்வளவு சுவையாக இருந்தாலும், பிரபலமானாலும் அவரை பார்த்தால் சமையல்காரர் வருகிறார் என்று தான் கூறுவார்கள். அது எனக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன்.
ஆனால் என் தந்தை என்னுடைய தொழிலுக்கு நீ வர வேண்டாம் .அது அந்த அளவிற்கு நன்மை அல்ல .நீ வேறு ஏதாவது மதிக்கத்தக்க வேலைக்கு செல் என்று எனக்கு அறிவுரை கூறினார். அதன்படி நானும் இன்ஜினியரிங்கை படித்து முடித்தேன். ஆனால் 2002 ஆம் ஆண்டு தந்தைக்கு உதவியாக வரவேண்டும் என்று என்னை அவரே அழைத்தார் எனக்கும் சமையல் வேலை மிகவும் பிடிக்கும் என்பதால் நானும் அதற்கு சென்று விட்டேன்.
அங்கு தான் என்னுடைய இந்த பயணம் தொடங்கியது தந்தைக்கு கிடைத்த அந்த பேரை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன் அதற்காக உழைத்தேன், முயற்சி செய்தேன் இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறேன் என்று அவர் கூறியது பிரம்மிக்க வைத்திருக்கிறது.
சமையல்காரர் ஆக கூட சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் மாதம் பட்டி ரங்கராஜ் சமையல்காரர் என்ற பெயரை சமயல் கலைஞர் என்று மாற்றி விட்டார் மாதம் பட்டி ரங்கராஜ் . இப்பொழுது ரங்கராஜ் தன் தந்தை கூறியது போல் மதிக்கத்தக்க வேலையும் செய்கிறார். தனக்கு பிடித்த வேலையும் செய்கிறார்.
இது பல இளைஞர்களுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள். பிரபலங்களுக்கு இருப்பது போன்றே இவருக்கும் பல ரசிகர்களும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.