Saturday, April 27, 2024
- Advertisement -
Homeசினிமா“ நான் லியோ படத்திற்காக 2 வருடம் முன்பே.. ” - என்னது 2 வருடம்...

“ நான் லியோ படத்திற்காக 2 வருடம் முன்பே.. ” – என்னது 2 வருடம் முன்பா.. புதிய ஷாக் தகவல் அளிக்கும் மடோனா செபாஸ்டின்

தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம் நான்கே நாளில் உலகெங்கும் 400 கோடிகளை அள்ளி புதிய வசூல் சாதனை படைத்துள்ளது. சற்று கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே வசூல் வேகத்தை யாவராலினும் தடுக்க இயலவில்லை.

- Advertisement -

இந்தப் படமும் மல்டிஸ்டாரர் படமே. தளபதி விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ் என ஓர் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர். மேலும் படத்தின் இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ்பேக்கில் மடோனா செபாஸ்டின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் வருகின்றனர்.

படத்தின் இரண்டாம் பாதியில் தளபதி விஜய்யின் தங்கையாக மடோனா செபாஸ்டின் அறிமுகமாகிறார். மடோனாவுக்கு படத்தில் குறைந்த ஸ்க்ரீன் ஸ்பேஸ் மட்டுமே கிடைத்தது. ‘ நான் ரெடி தான் ’ பாடலில் விஜய்யுடன் நடனம், ஒரு ஃபைட் காட்சி, அதன் பின்னர் உயிரிழக்கிறார் மடோனா செபாஸ்டின்.

- Advertisement -

லியோ படக்குழு படத்தில் நடிப்பவர்களின பட்டியலை வெளியிடும் போது அதில் மடோனாவின் பெயரை கூறவில்லை. ஆனால் நாள் போக்கில் சில தகுந்த வட்டாரங்களில் இருந்து அவர் படத்தில் இருப்பது உறுதியானது. இது குறித்து தற்போது நடிகை மடோனா செபாஸ்டின் அவர்களே பேசியுள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ நான் லியோ படத்தில் நடிப்பது என் அம்மாவைத் தவிர வெளியில் யாருக்குமே தெரியாது. மிகவும் ரகசியமாகவே வைத்திருந்தேன். இந்தப் பெரிய படத்தில் நான் நடித்தது எனக்கும் மிகவும் பெருமையாக உள்ளது. மேலும் இப்படத்தில் சண்டைக் காட்சிகளுக்காக அன்பரிவு மாஸ்டர்கள் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பயிற்சி அளித்தனர். ”

மடோனா இதில் குறிப்பிட்ட 2 வருடங்கள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. லியோ படம் துவங்கி சரியாக ஒரு வருடம் தான் ஆகிறது. அப்புறம் எப்படி இவர் 2 வருடங்கள் என்கிறார் என கேள்வியை எழுப்பியுள்ளனர். மடோனா தெரியாமலா மாற்றி கூறியிருப்பார் என்பதே இதற்கு சிம்பிளான பதில். பெரிய குழப்பம் தேவையில்லை.

Most Popular