Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஅட போங்கப்பா.. நாங்க நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு.. ! வருத்தத்தில் மாவீரன் படக்குழு.. !

அட போங்கப்பா.. நாங்க நினைத்தது ஒன்னு நடந்தது ஒன்னு.. ! வருத்தத்தில் மாவீரன் படக்குழு.. !

நடிகர் சிவகார்த்திகேயன் – மடோன் அஷ்வின் கூட்டணியில் உருவாகிய திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து அறிமுகப் போட்டியிலேயே தேசிய விருது வென்றவர் அஷ்வின். அவரின் இரண்டாவது படத்தில் அதனால் கூடுதல் நம்பிக்கை.

- Advertisement -

வெற்றிப் பாதையில் மாவீரன்

ஜூலை 14ஆம் தேதி உலகெங்கும் வெளியான மாவீரன் திரைப்படம் எதிர்பார்த்தது போலவே நல்ல வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன், அதித்தி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு நால்வரும் நடிப்பில் பிராமதம் செய்துள்ளனர். வசூலில் ஏற்கனவே 60 கோடியை தாண்டிவிட்டது.

மாவீரனில் கிளைமாக்ஸ் சிக்கல்

இந்தப் படத்தின் முதல் பாதியில் சிவகார்த்திகேயன் – யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகள் மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தொடர்ந்து வந்து இரண்டாம் பாதி பலருக்கு மிகவும் சுமாராக தென்பட்டது குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி.

- Advertisement -

அஷ்வின் எடுத்திருந்த கிளைமாக்ஸ் காட்சி யாருக்குமே பிடிக்கவில்லை. சிறந்த இடைவேளையைக் கொடுத்த இயக்குனர் சரியாக படத்தை முடிக்கத் தவறியுள்ளார் என பல்வேறு கமென்ட்டுகள் கூறப்பட்டன.

- Advertisement -

தான் கூற வந்த செய்தியை மக்கள் சரியாகப் புரிந்துக் கொள்ளவில்லை என்றும் அதற்கு தன் மேல் முழு பழியையும் போட்டுக் கொண்டுள்ளார் இயக்குனர் அஷ்வின். சிவகார்த்திகேயன் எதிர்பார்த்தது போலவே தன் முந்தைய படத்தில் மிஸ் ஆனதை இங்கு ஈடு காட்டியுள்ளார்.

இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சிக்கு வரும் எதிர்ப்பைக் கண்டு படக்குழு, சிவகார்த்திகேயனின் கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் நன்றாக செதுக்கியிருக்கலாம் என வருந்தியுளோனர். மண்டேலா படத்தில் கிளைமாக்ஸ் காட்சிக்கு பெயர் போன அஷ்வின் இம்முறை தன் சிறந்த இடத்தில் சொதப்பியுள்ளார். எனினும் மொத்தத்தில் பட நல்ல விமர்சனத்தையே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular