சினிமா

சந்திரமுகி 2 படத்தில் 2 ஹீரோயின் ! 2வது கதாநாயகியாக படக்குழுவில் இணையும் கேரள நடிகை !

Chandramukhi 2

ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 திரைப்படம் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இயக்குனர் பி வாசு நடிகர் ரஜினிகாந்துக்காக ஏற்கனவே தயாரித்து வைத்த இந்த திரைப்படத்தில் தற்போது லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. முனி, காஞ்சனா போன்ற பேய் படங்கள் நடித்து பிரபலமான நடிகர் லாரன்ஸுக்கு சந்திரமுகி 2 திரைப்படம் திருப்பு முனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரமுகி திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்தது . தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது. சந்திரமுகி 1 படத்தில் உள்ள அதே கதைக்களத்தை வைத்து 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திரமுகி வருவது போல் கதைக்களத்தை பி வாசு தயாரித்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

Advertisement

இந்த நிலையில் இந்தப் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது . சந்திரமுகி படத்தில் ரஜினியை விட ஜோதிகாவுக்கு தான் அதிக பவர்ஃபுல் கதாபாத்திரமாக இருந்தது.இந்த இரண்டாம் பாகத்தில் யார் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ரசிகர் மனதில் இருந்த நிலையில், லட்சுமிமேனன் சந்திரமுகி 2 படத்தில் இணைந்துள்ளார். இந்த நிலையில் பிரபல நடிகை மஹிமா நம்பியார் சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.இவர் குற்றம் 23, மகாமுனி, அசுரகுரு போன்ற திரைப்படங்களில் ஏற்கனவே நடித்து இருக்கிறார்.

மேலும் சந்திரமுகி படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கிய வடிவேலுவும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றிய கீராவாணி சந்திரமுகி 2 படத்திற்கு இசை அமைக்க உள்ளார்.

Advertisement

இந்த நிலையில் சந்திரமுகி படம் ஹிந்தியில் பூல் பாலையா என்று 2007 ஆம் ஆண்டு நடிகர் அக்ஷய்குமார் நடித்து ரீமேக் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது பாலிவுட்டில் கார்த்திக் ஆர்யான், கியாரா அத்வானி, தபு ஆகியோர் நடித்து வெளியாகி 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இந்தப் படத்தில் வருவது போல் ஹீரோயின் குடும்பத்தை பேய் ஓட்டும் நபராக அறிமுகமாகும் ஹீரோ, அந்த கிராமத்தில் எதிர்ச்சியாக நடக்கும் சம்பவத்தை பயன்படுத்தி ஹீரோ பெயர் எடுத்து பிரபலமாகி, பின்னர் உண்மையாக ஒரு சூனியக்காரியை எதிர்கொண்டு அந்த குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார் , குடும்பத்தில் பின்னணி என்ன ? அந்த குடும்பத்தில் நடந்த மர்ம மரணங்களுக்கு யார் காரணம் என்பதை ஹீரோ கண்டுபிடிப்பார். இதே போன்ற கதையை சந்திரமுகியோடு ஒப்பிட்டு படம் வரலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் சந்திரமுகி 2 படமும் அதே போல் சாதனை படைக்கும் என்று திரைப்பட வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top