Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாதங்கலான் படத்தில் மாளவிகா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. ! கதாபாத்திரத்தின் பெயர் கூட ரீலீஸ்.....

தங்கலான் படத்தில் மாளவிகா மோகனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. ! கதாபாத்திரத்தின் பெயர் கூட ரீலீஸ்.. !

பா.ரஞ்சித் தலைமையில் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் தங்கலான். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை படக்குழு ஏற்கனவே நிறைவு செய்துவிட்டது.

- Advertisement -

கடந்த மாதம் ரஞ்சித் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதையும் முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதுவரை இந்தப் படத்தில் முன்னணியில் நடிக்கும் விக்ரமின் பில புகைப்படங்கள் மற்றும் ஓர் கிளிம்ஸ் வீடியோ வெளியானது. அனைத்துமே மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இன்று படத்தின் நாயகியான மாளவிகா மோகனின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் அவரின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பேட்ட, மாஸ்டர், கிரிஸ்ட்டி போன்ற படங்களில் வரும் ஹாட்டான மாளவிகா போல் இல்லாமல் இந்த முறை முற்றிலும் கன்டென்ட் கொண்ட படத்தில் முழு உழைப்பையும் போட்டுள்ளார்.

- Advertisement -

தங்கலான் லுக்கில் மாளவிகா மோகன்

மாளவிகா தன் கையில் வேல்கம்பை ஏந்திக் கொண்டு இருப்பது போல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் அவரது பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது. தங்கலான் திரைப்படத்தில் ‘ ஆரத்தி ’ என்ற பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் அவர் வருகிறார்.

- Advertisement -

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் தங்கலான் படம் முழுக்க விக்ரம் கதாபாத்திரத்தை மற்றும் கே.ஜி.எப் சுரங்கதைச் சுற்றியே நடக்கும். இயக்குனர் ரஞ்சித்தின் இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அதை படக்குழு பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கலாம்.

Most Popular