சமீபத்தில் பல எதிர்பார்ப்பை தூண்டும் புரோமோக்கள் மூலம் கவனத்தை ஈர்த திரைப்படம் கிறிஸ்டி. இப்படத்தில் மாளவிகா மோகனன், மேத்யூ தாமஸ் லீட் நடிகர்களாக வருகின்றனர். படத்தை இயக்கிய ஆல்வி ஹென்றிக்கு இது அறிமுகப் படமாகும்.
இன்று பிப்ரவரி 17ஆம் தேதி திரைப்படம் உலகெங்கும் வெளியாகியது. பொதுவாக இந்த வகையில் வரும் மலையாளப் படங்கலெல்லாம் ஃபீல் குட் மற்றும் லைட் ஹார்ட்டாக விளங்கும். ஆனால் இன்னும் இம்முறை மாலிவுட் சற்று வழி தவறி சறுக்கியுள்ளது.
படத்தின் களம்
படத்தில் ராய் கதாபதரித்தில் வரும் மேத்யூ ஹென்றி படிப்பில் முன்னேறும் எண்ணத்தில் கிறிஸ்டியிடம் (மாளவிகா மோகனன்) பயிற்சி வகுப்புக்கு செல்கிறார். அங்கு க்ளோசாகி அவர்களுக்கு இடையே காதல் மலருவது போல் கதை அமைகிறது. பின்னர் கிறிஸ்டி வெளிநாட்டு வேலைக்கு செல்ல ஹென்றியின் வாழ்கை மாறுகிறது. இது தான் படத்தின் கதைக் களம்.
வெளியீட்டுக்கு முன்னர் நல்ல புரொமோஷன் கிடைத்ததால் படத்தின் முதல் நாளான இன்று கூட்டம் நன்றாகவே வந்தது. சில இடங்களில் ஹவுஸ்புல் ஷோக்கள் கூட இருந்தது. வந்த விமர்சனங்களைப் பார்க்கையில் இதை அனைத்தையும் இப்படம் தக்க வைக்காது என்றே தோன்றுகிறது.
பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் பெரிதாக திருப்பதி அடையவில்லை. பெரும்பாலானோர் முதல் பாதி ஓகே ! ஆனால் அடுத்த பாதி தான் மோசம் என்றனர். இரண்டாம் பாதியின் ஸ்கிரீன்ப்ளே மகா மட்டம் என ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். பாசிட்டிவ் என்று பார்த்தல் படத்தில் நடிதர்வகள் சிறப்பாக செய்திருந்தனர் மற்றும் கோவிந்தன் இசை மென்மை. இரண்டாம் பாதி தான் பெரிய அடி, அதைச் சரியாக செய்திருந்தால் நிச்சயம் “ சரி, பார்க்கலாம் ” என்ற அளவிற்காவது விமர்சனங்களைப் பிடித்திருக்கும்.