சினிமா

மாமனிதன் படத்துக்கு கிடைத்த கவுரவம்.. சர்வதேச அளவில் குவிந்த விருதுகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி தற்பொழுது மாமனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை போன்ற விஜய் சேதுபதி நடித்த படத்தை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி தான் மாமனிதன் படத்தையும் இயக்கி இருக்கிறார்.பொதுவாகவே இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று,தர்மதுரை போன்ற படங்கள் கிராமத்து சூழலை கதைக்களமாகக் கொண்டதாக இருக்கும். ஒரு வித்தியாசமான படைப்பாகவும் இருக்கும். இந்த வரிசையில் இவர் தற்பொழுது இயக்கி விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படமும் ஒரு வித்தியாசமான படைப்பாக தான் உள்ளது.

விஜய் சேதுபதி ஒரு சாதாரண ஆட்டோ ஓட்டுனராகவும் 2 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இந்த திரைப்படத்தின் நடித்திருக்கிறார். புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடித்த காயத்ரி தான் மாமனிதன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் இளைராஜாவும்,யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி பொதுவாகவே எந்தவிதமான கதையை கொடுத்தாலும் அதற்கு பொருத்தமாக நடிக்கும் திறன் கொண்டவர்.அதனால் தான் அவர் கதாநாயகனாக இருந்தாலும் வில்லனாக இருந்தாலும் அவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இவருக்கு கதாநாயகனாக நடித்துள்ள மாமனிதன் திரைப்படத்திற்கு TIFF என்று சொல்லப்படும் தாகூர் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என்ற விழாவில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாமனிதரின் இயக்குனரான சீனு ராமசாமிக்கு விமர்சகர்களின் விருப்பம் மற்றும் அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ்மென்ட் அவார்ட்ஸ் என்று இரண்டு பிரிவுகளிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Tiff என்று சொல்லக்கூடிய இந்த விருதை டோக்கியோ ஃபிலிம் அவார்ட்ஸ் என்றும் கூறுவார்கள்.

ஏசியாவிலேயே சிறந்த திரைப்படம் என்று விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் திரைப்படம் விருதைப் பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.ஏற்கனவே பெர்லின் திரைப்பட விழாவிலும் மாமனிதன் திரைப்படம் விருதுகளை வாங்கியுள்ளது.
இதனால் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தோடு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விருதுகளை குவித்தாலும் மாமனிதன் திரைப்படம் வர்த்தக ரீதியில் தோல்வியை தழுவியுள்ளது.

Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது.

TOP STORIES

To Top