Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாஏ.ஆர். ரஹ்மானின் பாடலை கேட்டு தற்கொலை முயற்சியை கைவிட்ட நபர்

ஏ.ஆர். ரஹ்மானின் பாடலை கேட்டு தற்கொலை முயற்சியை கைவிட்ட நபர்

பொதுவாகவே இசை என்பது மனிதர்களின் கவலைகளை நீக்க கூடிய திறன் பெற்றது.அப்படிப்பட்ட இசைக்கு உயிர் கொடுப்பவர்கள் தான் இசையமைப்பாளர்கள். அந்த வகையில் தன்னுடைய இசையால் வளரையும் தன்வசம் படுத்தக் கூடிய திறன் பெற்றவர் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்.

- Advertisement -

ஒரு புயல் காற்று வீசினால் எவ்வளவு நிலையான பொருளும் அந்தக் காற்று உடைய வேகத்தில் காற்று செல்லும். அதை கட்டுப்படுத்த யாராலும் முடியாது அதேபோல்தான் ஏ ஆர் ரகுமானின் உடைய இசையைக் கேட்பவர்களும் யாருக்கும் கட்டுப்படாமல் அதற்கு தன்னாக அடிமையாகி விடுவார்கள். அதன் காரணத்தினால் தான் அவருக்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் என்ற பட்டமும் கிடைத்தது.

ஏ ஆர் ரகுமானின் உடைய இசைப்பயணம் முதன் முதலில் ரோஜா திரைப்படத்தின் மூலம் தான் தொடங்கியது. முதல் படமே அவரின் அடையாளமாகவே மாறியது.

- Advertisement -

மேலும் அதற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதை தொடர்ந்து அவர் நிறைய திரைப்படங்களுக்கு இசையமைத்து வெற்றி அடைந்திருக்கிறார். மேலும் 2009 ஆம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லினர் என்று சொல்லப்படும் ஹாலிவுட் திரைப்படத்திற்கு இரண்டு ஆஸ்கார்களை பெற்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார் இசை புயல் ஏ ஆர் ரகுமான்.

- Advertisement -

எத்தனையோ இசை கலைஞர்கள் இருக்கும் பொழுது. இவருடைய இசைக்கு மட்டும் ஒரு தனித்துவம் எப்பொழுதுமே உண்டு. ஆனால் தற்பொழுது இவருடைய இசைக்கு அந்தத் தனித்துவம் இருக்க என்ன காரணம் என்பதும் புரிந்திருக்கிறது.

இவர் அமைத்த பாடலைக் கேட்டு ஒரு நபர் தற்கொலை முயற்சியை கைவிட்டு இருக்கிறாராம் அந்த அளவிற்கு அதில் ஈர்ப்பு இருக்கிறது.

மலேசியாவில் உள்ள செல்வகுமார் என்ற நபர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் நான்காம் தேதி நள்ளிரவில் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்ம் அப்பொழுது என்னுடைய நண்பர் ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தார் .அதில் ஓகே கண்மணி திரைப்படத்தின் நானே வருவேன் என்ற பாடல் இடம் பெற்றிருந்தது அதைக் கேட்டதும் என்னுடைய கவலைகள் எல்லாம் தீர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டு விட்டேன்.

அதற்குப் பிறகு 48 மணி நேரம் குறையாமல் அந்தப் பாடலை திருப்பித் திருப்பி நான் கேட்டு என்னையே மறந்தேன் என்று டிவிட் செய்து இருக்கிறார். மேலும் தன்னுடைய கைகளில் ஏ ஆர் ரகுமானின் பெயரை சுருக்கி ஏ ஆர் ஆர் என்று பச்சை குத்தி இருக்கிறார்.

மேலும் இசை கேட்கும் பொழுது நாம் பயன்படுத்தும் பட்டன்களையும் அதற்கு கீழ் இதயத்துடிப்பை போல கற்பனையில் சிந்தித்து பச்சை குத்தி இருக்கிறார்.அதை பார்க்கும் பொழுது அவர் இசைதான் எனது உயிர் அதற்கு காரணமே ஆர் ரகுமான் தான் என்று கூறுவது போல் இருக்கிறது.

இதைப் பார்த்த ஏ ஆர் ரகுமான் அவருடைய டிவிட்டுக்கு கீழ் எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி நலமுடன் வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி இருந்தார். இந்த செய்தி ட்விட்டரில் பரவி வருகிறது.

Most Popular