Saturday, December 7, 2024
- Advertisement -
Homeசினிமாஇப்படியும் திருடர்கள் இருப்பார்களா மணிகண்டனின் தேசிய விருது விவகாரத்தில் என்ன நடந்தது

இப்படியும் திருடர்கள் இருப்பார்களா மணிகண்டனின் தேசிய விருது விவகாரத்தில் என்ன நடந்தது

தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மணிகண்டன். இவர் அதைத் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி என்று மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார் .

- Advertisement -

இதில் அவர் இயக்கிய காக்கா முட்டை திரைப்படத்திற்கும் ,கடைசி விவசாய திரைப்படத்திற்கும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டது .இவருடைய சொந்த ஊர் மதுரையில் இருக்கும் உசிலம்பட்டி ஆகும். 2 மாத காலமாக அவர் தன்னுடைய சொந்த வேலைக்காக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.

தன்னுடைய சொந்த ஊரான உசிலம்பட்டியில் இருக்கும் தன்னுடைய வீட்டில் அவர் வளர்த்த நாயை மட்டும் விட்டு விட்டு அனைவரும் சென்னைக்கு சென்று விட்டனர் .அந்த நாயை இவருடைய உதவியாளர்கள் பராமரித்து வந்தனர்.

- Advertisement -

அந்த நிலையில் சமீபத்தில் ஒரு நாள் அந்த நாய்க்கு உணவளிப்பதற்காக சென்றபோது கதவுகள் உடைக்கப்பட்டு வீடு அலங்கோலமாக கிடந்தது. பிறகு 5 பவுன் நகையும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் மேலும் மணிகண்டன் வாங்கிய இரண்டு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

- Advertisement -

தொடர்ந்து இந்த நிலைக்குறித்து போலீசார்களிடம் புகார் கொடுத்திருந்தார் இயக்குனர் மணிகண்டன் .அவர்களும் விசாரணை நடத்தி வரும் நேரத்தில் இன்று இயக்குனர் மணிகண்டனின் உசிலம்பட்டியில் இருக்கும் வீட்டில் ஒரு குச்சியில் பாலிதீன் பையில் அவருடைய அந்த பதக்கங்களையும், அதில் ஒரு பேப்பரில் “ஐயா எங்களை மன்னித்து விடுங்கள் உங்கள் உழைப்பு உங்களுக்கே” என்று எழுதி அந்த கொள்ளையர்கள் பதக்கத்தை மட்டும் திருப்பித் தந்திருக்கிறார்கள்.

செய்யும் தொழிலில் தர்மம் பார்த்திருக்கும் அந்த கொள்ளையர்களை அந்த பதக்கத்தையும் ,கையெழுத்தையும் வைத்து வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள் போலீஸார்கள். இந்த செயல் அந்தப் பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Most Popular