Monday, December 4, 2023
- Advertisement -
Homeசினிமாமணிமேகலைக்கு நடந்த அவமானம்.. அத்துமீறிய சேல்ஸ் கேர்ள்.. உண்மையில் நடந்தது என்ன?

மணிமேகலைக்கு நடந்த அவமானம்.. அத்துமீறிய சேல்ஸ் கேர்ள்.. உண்மையில் நடந்தது என்ன?

இன்றைய காலகட்டத்தில் ஒருவர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் ஒரு youtube சேனல் ஆரம்பித்தாலே போதும். யூடியூப்பர்களை செலிபிரிட்டிகளைப் போன்று தற்பொழுது உள்ள ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு இந்த youtubeர்களும் தனக்கு என்னென்னெல்லாம் தோன்றுகிறதோ ஒரு வரைமுறையே இல்லாமல் கண்டன்டுகளை போட்டு ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள்.

- Advertisement -

அதில் மிக உச்சத்தில் இருக்கும் மிக மோசமான கன்டென்ட் என்றால் பிராங்க் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி பிழைப்பது தான். அந்த வகையில் தற்பொழுது விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலை மற்றும் அவருடைய கணவன் உசைன்.

மணிமேகலை உடைய பிராங்க் வீடியோ ஒரு மாதத்திற்கு முன்பு ஆடி மாத ஆஃபர்கள் நடந்து கொண்டிருந்த சமயத்தில் லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் இருக்கு நகை வாங்க தன் கணவர் ஹுசைன் உடன் மணிமேகலை சென்ற ஒரு வீடியோ பிஹைன் டூல்ஸ் பதிவிடப்பட்டு இருந்தது.

- Advertisement -

அதில் நகை கடைக்கு தன் கணவருடன் சென்ற மணிமேகலையை ஒரு சேல்ஸ் கேர்ள் புர்கா அணிந்து கொண்டு மணிமேகலையை அவமானப்படுத்துவது போன்று ஆரம்பத்தில் இருந்தே பேசி இருந்தார். நகை வாங்குவதாக இருந்தால் மட்டும் பார்க்க வேண்டும் என்றும் ஓசியில் ஈசி காற்று வாங்க தானே வந்தீர்கள் என்பது போன்றே அவமானமாக பேசி வந்தார்.

- Advertisement -

அந்த செயல்கள் அதனால் கடுப்பான மணிமேகலை இருவருக்கும் இடையில் சில நேரம் விவாதம் ஏற்பட்ட பிறகு தன் முகத்தை திறந்து காட்டி பிராங்க் செய்தார் குக் வித் கோமாளியின் கண்டஸ்டண்டாக வந்த சுருதிஹா அர்ஜுன்.

ஸ்ரீ, நல தமயந்தி போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ருதிகா அர்ஜுன். இவர் தற்பொழுது குக் வித் கோமாளியின் ஒரு கண்டஸ்டன்ட்டாக இருந்து பிரபலமானால் குறித்து கோமாளியில் இருக்கும் பொழுது மணிமேகலைக்கும் இவருக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்தது.

அதனின் அடிப்படையில் தான் இருவரும் பிராங் செய்திருக்கிறார்கள். ஆனால் நெட்டிசன்கள் அவர்கள் இருவரும் விவாதம் செய்த அந்த பகுதியை மட்டும் எடுத்து மணிமேகலையை கைநீட்டி பேசிய அந்த சேல்ஸ் ஒர்க்கர் யார் நகைக்கடையில் மணிமேகலைக்கு நடந்த அவமானம் , அத்துமீறி பேசிய சேல்ஸ் கேர்ள் என்றெல்லாம் தலைப்புகளை வைத்து மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

இது போன்ற வீடியோக்களால் பிறரின் நேரமும் வீணடிக்கப்படுகிறது அதேசமயம் ரசிகர்கள் ஏமாற்றம் அடைகிறார்கள். இது போன்ற வீடியோக்களை தவிர்க்க வேண்டும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் .தான் பிரபலமாவதற்காக இப்படி எல்லாம் வீடியோக்களை போட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம் என்றும் கண்டித்து வருகிறார்கள்.

அந்த வீடியோவில் ஏற்பட்டது மணிமேகலைக்கு அவமானம் அல்ல. அந்த வீடியோவை ரசிகர்கள் விமர்சித்து பேசுவது தான் உண்மையிலேயே அவருக்கு மிகப்பெரிய அவமானம் ஆகும். இது போன்ற வீடியோக்களை அவர் தவிர்த்துக் கொள்வது அவருக்கு நல்லது.

Most Popular