இயக்குனர் மணிரத்னம் 35 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் மாஸ்டர்பீஸ் படங்களை கொடுத்து வருகிறார். மௌனராகம் முதல் ஓகே கண்மணி வரை மணிரத்னத்தின் காதல் படங்களுக்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதற்கு ஓர் முக்கிய காரணம் காலத்திற்கு ஏற்ப்ப அவர் மாறுவதே.
அவரது படங்கள் உலகத்தரம் வாய்ந்தவை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். இதுவரை அதற்காக ஆஸ்கார் விருதுகள் வெல்லவில்லை என்றாலும் தற்போது அவருக்கு ஆஸ்கார் குழுவில் இருந்து கவுரம் கிடைத்துள்ளது. மணிரத்னம் உட்பட இன்னும் 3 கலைஞர்களுக்கும் அது அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கார் தேர்வு குழுவில் இயக்கு மணிரத்னம்னர் மணிரத்னம்
அண்மையில் வெளியான மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுப் பட்டியலில் இடம்பெறும் என நினைப்பதற்கு முன்பே அப்படத்தின் இயக்குனர் ஆஸ்கார் தேர்வு குழுவில் இடம் பெற்றுவிட்டார். பல்வேறு நாடுகளில் இருந்து போட்டியிடும் படங்களில் சிறந்தவையை தேர்வு செய்யும் குழுவே அது.
ஆஸ்கார் தேர்வு குழுவில் மற்ற இந்திய பிரபலங்கள்
2023ஆம் ஆண்டிற்கான தேர்வு குழுவில் மணிரத்னம் அவர்களுடன் மற்ற 3 பிரபலங்களும் இடம் பெற்றுள்ளனர். அந்த மூன்று பிரபலங்கள் ஆர்.ஆர்.ஆர் பட குழுவைச் சேர்ந்தவர்களே ! சென்ற ஆண்டிற்கான நிகழ்ச்சியில் நாட்டு நாட்டுப் பாடலுக்கு விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி, நடிகர் ராம்சரண் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஆகியோர் ஆவர். இது ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு கிடைத்த மற்றொரு கவுரவம்.
ஒட்டுமொத்தமாக 398 சினிமா கலைஞர்களுக்கு இந்த ஆண்டு ஆஸ்கார் தேர்வுக் குழுவில் இணையுமாறு ஆஸ்கார் தலைமை செயலாளர் பில் கிரெமார் அழைப்பு விடுத்துள்ளார். இதில் 4 இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது மிகப் பெருமையான ஒன்று. இவர்களைப் பாராட்டி ஏ.ஆர்.ரஹ்மான் டிவிட் செய்துள்ளார். ஏற்கனவே கோலிவுட்டில் இருந்து ரஹ்மானும் நடிகர் சூர்யாவும் அந்தப் குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பட்டியலிப் இயக்குனர்கள் பிரிவில் மணிரத்னம் இணைந்துள்ளார்.