Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாமணிரத்னம் கூட்டணியில் தயாராகும் கமல்ஹாசன் 234 புரோமோ அப்டேட்.. !

மணிரத்னம் கூட்டணியில் தயாராகும் கமல்ஹாசன் 234 புரோமோ அப்டேட்.. !

இயக்குனர் மணிரத்னம் – உலகநாதன் கமல்ஹாசன் கூட்டணி 36 வருடங்களுக்குப் பின் மீண்டும் கைக் கோர்துள்ளது. கடைசியாக அவர்கள் சேர்ந்து செய்த நாயகன் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக். அதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் 234வது படத்தை இயக்குகிறார் மணிரத்னம்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் இரு பாகங்களையும் வெற்றிகரமாக வெளியிட்டு தன் வாழ்நாள் லட்சியத்தை அடைந்துவிட்ட மணிரத்னம் உடனே தன் அடுத்த படத்தின் பணிகளையும் துவங்கவுள்ளார். இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஆர்.கே.எஃப்.ஐ இணைந்து தயாரிக்கின்றனர்.

கமல்ஹாசன் 234வது படத்தின் அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகியது. அதைத் தவிர வேற எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அடுத்த மாதம் அந்தப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. மே இரண்டாவது வாரத்தில் புரோமோ ஷூட்டிங் ஆரம்பிக்கிறார் மணிரத்னம். ஜூன் மாதம் பிரம்மாண்ட அப்டேட்கள் காத்திருக்கிறது.

- Advertisement -

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பில் மிக பிஸியாக இருக்கிறார். கிட்ட தட்ட இறுதிக் கட்ட பணிகளை நெருங்கியுள்ளது இந்தியன் 2. இந்த தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது லைகா நிறுவனம். இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு உடனே மணிரத்னம் படத்தை தொடரவுள்ளார் கமல்ஹாசன்.

- Advertisement -

கமல்ஹாசன் – மணிரத்னம் படத்திற்கு ஹீரோயினாக நடிக்க முதலில் நயன்தாராவை அணுகினார்கள். அவர் வாய்ப்பை தவிர்த்ததால் பாலிவுட் நடிகை வித்யா பாலனிடம் சென்றுள்ளனர். அவர் படத்தில் ஒப்பந்தம் ஆவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. நேர்க்கொண்ட பார்வை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் வித்யா பாலன் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Popular