தமிழ் திரையுலகில் பல்வேறு மென்மையான படங்களைத் தந்தவர் இயக்குனர் சீனு ராமசாமி. கூடல் நகர், நீர்ப்பறவை, தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் போன்ற படங்கள் இவரது பெயருக்கு பின் உள்ளது.
சுமார் 9 ஆண்டுகள் முன் 2014ல் சீனு ராமசாமி ‘ இடம் பொருள் ஏவல் ’ எனும் படத்தை செய்தார். பல்வேறு சிக்கல்களால் இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இதில் நடிகை மனிஷா யாதவ் கதாநாயகியாக நடிக்கவிருந்து பின்னர் நீக்கப்பட்டார். அதற்க்கு உண்மையான காரணங்கள் வெளியாகியுள்ளது. அதாவது, தன்னை ஷூட்டிங்கில் தொந்தரவு செய்ததாக மனிஷா யாதவ் தெரிவித்துள்ளார்.
நடிகை மனிஷா யாதவ் கூறியதாவது, “ சில வாரங்களுக்கு முன் இயக்குனர் சீனு ராமசாமியின் ஆபீஸில் இருந்து அழைப்பு வந்தது. அவருக்கும் எனக்கும் சரியான தொடர்பு இல்லாத போது ஏன் இந்த அழைப்பு என்று தோன்றியது. ‘ இடம் பொருள் ஏவல் ’ படத்தின் போது அவர் இழுத்த இழுப்புக்கு நான் ஒத்துழைப்புத் தராததால் என்னை அவரு படத்தில் இருந்து நீக்கி விட்டார்.“”
“ இதனால் நானும் இனி அவரது படத்தில் நடிக்க விரும்பவில்லை. உடனே எனக்கு பதிலாக மாற்று நடிகையும் தேர்ந்தெடுக்கப்பட்டடார். இயக்குனர் எதிர்பார்க்கும் அப்வு நான் நடிக்கவில்லை எனும் காரணத்திற்காக என்னை நீக்கியிருந்தால் எனக்கு சிக்கல் இல்லை. ஆனால் அவரின் குப்பை மெசேஜுகளை பொறுத்துக்கொண்டு இருக்க இயலவில்லை. ” என்றார்.
அண்மையில் சீனு ராமசாமி வேறொரு நிகழ்ச்சியில் இதெல்லாம் பொய் எனக் குறிப்பிட்டு தனக்கு மனிஷா யாதவ் மேடையில் நன்றியெல்லாம் கூறியுள்ளார், நாங்கள் நல்ல தொடர்பில் தான் உள்ளோம் என்றார். இதற்கு மனிஷா யாதவ் மிகவும் கோபப்பட்டு பதிலடி கொடுத்துள்ளார். “ ஒரு குப்பைக் கதை படத்தின் நிகழ்ச்சியில் நான் மேடையில் இருக்கும் அனைவரையும் குறிப்பிட்டு நன்றி சொல்லும் போது எப்படி அவரை மட்டும் தவிர்க்க முடியும். அது தொழில் தர்மம் அல்ல. ” என உண்மையைக் கூறியுள்ளார்.
சமூகத்தில் நல்ல மனிதனாக கருதப்பட்ட சீனு ராமசாமி இவ்வளவு ஆண் திமிரைக் காட்டியது மிகவும் மோசம். மக்கள் அவரை சமூக வலைத்தளத்தில் வைத்துச் செய்கின்றனர். தான் சந்தித்ததை இனி எந்தப் பெண்ணும் சந்திக்க கூடாது என மனிஷா யாதாவ் நினைக்கிறார்.