தமிழகத்தில் மலையாளத் திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் இளைஞர்கள் குணா குகையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை.
படம் தமிழகத்தில் நடப்பதால் பெரும்பாலான வசனங்கள் தமிழிலே இருக்கிறது. இதனால் இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. இந்த வாரம் ரிலீசான தமிழ் படங்களில் தூக்கி சாப்பிட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் டப்பிங் இல்லாமலேயே இந்த சாதனையை குவித்துள்ளது.
அதன்படி தமிழ் சினிமா வரலாற்றிலேயே 10 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் நேரடி மலையாள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதும் இது போன்ற மலையாள திரைப்படங்கள் சென்னையில் அதிக நாட்கள் ஓடும்.
பிரேமம், ஹிருதயம், லூசிபர் போன்ற திரைப்படங்கள் எல்லாம் சென்னையில் மட்டுமே 100 நாட்களுக்கு மேல் ஓடி இருக்கிறது. ஆனால் மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி ஊர்களில் கூட ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்புகிறது.
இதற்கு அந்த திரைப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் நன்றி தெரிவித்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படம் 5 கோடி ரூபாய் வசூலை தமிழகத்தில் பெற்றிருக்கிறது. இதன் மூலம் வார இறுதி மூன்று நாட்களில் இந்த படம் 10 கோடி ரூபாய் வசூலை செய்திருக்கிறது.
தமிழகத்தில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படங்கள் கூட இத்தகைய சாதனையை பெறவில்லை.இன்னும் சொல்லப்போனால் லியோ திரைப்படத்திற்கு பிறகு தமிழகத்தில் அதிக வசூலை குவித்த திரைப்படமாக மஞ்சு மேல் பாய்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்னும் கூட்டம் அலைமோதுவதால் இந்த படம் தமிழகத்தில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்த வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படத்தின் ஓ டி டி ரிலீஸ் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் இல் வெளியாக வாய்ப்பு உள்ளது.