மலையாளத்தில் இயக்குனர் சிதம்பரம் இயக்கிய மஞ்சுமெல் பாய்ஸ் என்ற திரைப்படம் உலக அளவில் ரசிகர்களிடம் பெருமளவில் வரவேற்கப்பட்ட திரைப்படமாகிவிட்டது. தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு இயக்குனர் சிதம்பரம் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
கொடைக்கானலுக்கு விடுமுறைக்காக வந்த நண்பர்கள் குழு எதிர்பாராத ஒரு சாகசங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அதை எப்படி கையாள்கிறார்கள் என்பது தான் மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை சுருக்கம்.
இந்தத் திரைப்படத்தை பார்த்த தனுஷ் விக்ரம் உதயநிதி போன்ற பிரபலங்களும் இந்த திரைப்படத்திற்கு நேரில் சென்று பாராட்டை தெரிவித்து வந்திருக்கிறார்கள். இது கூடுதல் சுவாரஸ்யமும் ஆச்சரியமும் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் நடிகர் உலகநாயகன் கமலஹாசன் நடித்த குணா திரைப்படத்தை பெருமைப்படுத்தும் விதமாக சில காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் காரணத்தினால் கமலஹாசன் மஞ்சுவல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குனர் சிதம்பரத்தை நேரில் சந்தித்து பாராட்டி இருக்கிறார்.
எந்தவித ஆரவாரமும் இன்றி சைலன்டாக வந்து சம்பவம் செய்திருக்கிறது மஞ்சு மேல் பாய்ஸ் திரைப்படம் இந்தத் திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வசூலை பெற்றது அதேபோல் இதுவரை தமிழகத்தில் 17.5 கோடிக்கு மேல் வசூலை பெற்றிருக்கிறது. இதில் நம்ப முடியாத ஒரு அதிசயமும் நடந்திருக்கிறது உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை பெற்று சாதித்திருக்கிறது.
தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற முதல் திரைப்படம் இன்றே இந்த திரைப்படம் பெயர் பெற்றுவிட்டது. இது போன்ற தகவல்களையும் பிரபலங்களை பாராட்டுகிறார்கள் என்றும் திரைப்படத்தின் மீது மேலும் ரசிகர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டு திரைப்படத்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது மஞ்சு மேல் வாய்ஸ் திரைப்படம்.