சினிமா

அஜித்தை இயக்குகிறாரா மங்காத்தா இயக்குனர்.. ! ஹின்ட் கொடுத்துள்ள வெங்கட் பிரபு.. !

Ajith Venkat Prabhu

இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் 62வது படத்தில் இருந்து விலகிய நிலையில் அவ்விடத்தை நிரப்புவது யார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. வர்தன், ஏ.ஆர்.முருகதாஸ் என பலர் அவரவர் இஷ்டத்திற்கு வதந்திகள் பரப்புகின்றனர். இறுதியாக இயக்குனர் மகிழ் திருமேனி உறுதியாகியுள்ளார். தடையறைத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் ஆகிய 4 தரமான திரில்லர் படங்களை இயக்கியவர் இவர்.

மேலும், படத்தின் கதை பி.எஸ்.மித்ரனுடையது எனவும் செய்திகள் வந்தன. ஆனால் இப்போது வரை அது கன்பார்ம் ஆகவில்லை. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லைகா நிறுவனத்திடம் இருந்து அஜித் 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

பரவிய வதந்திகளுக்கு இடையே வெங்கட் பிரபுவும் வந்தார். அஜித்தின் துணிவு படத்தில் வரும் ‘ நோ கட்ஸ் நோ க்ளோரி ’ வசனத்தை பொறித்த டி-ஷர்ட்டை வெங்கட் பிரபு அணிந்திருந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்து அதை ஹின்ட்டாக அவர் தான் அஜித்தை இயக்கப் போகிறார் எனப் பேசத் துவங்கினர். ஆனால் அவர் அஜித் 62 படத்தை இயக்கவில்லை.

ஆனால், அஜித்திடம் வெங்கட் பிரபுவும் தன் கதையை கூறியிருக்கிறார். இந்தப் படம் இல்லை என்றாலும் நிச்சயம் வரும் காலத்தில் அஜித்தை அவர் இயக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது நாகா சைதன்யா நடிக்கும் ‘ கஸ்ட்டடி ’ படத்தில் தீவிரமாக இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

Advertisement

ரசிகர்கள் வெங்கட் பிரபு வேண்டும் என ஏங்குவதற்கு மங்காத்தா தான் காரணம். கிளாசியன வில்லன் அஜித், தெறிக்கும் யுவனின் இசை, மெய் சிலிர்க்க வைக்கும் கிளைமாக்ஸ் டுவிஸ்ட் மற்றும் காமெடி காட்சிகள் என ஓர் கமர்ஷியல் த்ரில்லரை கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. அஜித்தின் கேரியரில் சிறந்த படங்களில் இது பெரிய இடத்தைப் பிடிக்கும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top