லியோ திரைப்படத்தில் நடித்த நடிகை திரிஷாவை பற்றி அதே திரைப்படத்தில் நடித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறிய ஒரு கருத்து மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளாகியது.
நடிகை திரிஷா மன்சூர் அலிகான் கூறியதை கண்டனத்திற்கு உரியது என்று கூறியதுடன் அவர் மீது வழக்கு தொடுத்து இருந்தார். தேசிய மகளிர் ஆணை பரிந்துரைப்படி இந்த வழக்கு நடிகர் மன்சூர் அலி கானுக்கு எதிராக 1000 விளக்கு அனைத்து மகளிர் காவல்துறையில் பதிவிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடிகை திரிஷாவிற்கு ஆதரவளிக்கும் இடத்திலும் நடிகர் மன்சூர் கானின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் நடிகை குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோரும் கருத்து தெரிவித்து வந்தார்கள்.
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாவிடம் பகிரங்கமாக எக்ஸ் பக்கத்தில் மன்னிப்பு கேட்டிருந்தார். அதையும் நடிகை திரிஷா ஏற்றுக்கொண்டு பதில் பதிவை அதில் பதிவிட்டிருந்தார். இதோடு இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்தால் தானாக வந்து தலையை கொடுத்து மாட்டிக் கொண்டார் நடிகர் மன்சூர் அலிகான்.
நான் பேசியதை முழுதாக பார்க்காமல் என்னை காண கேட்டிற்கு ஆளாக்கி விட்டார்கள் என்று நடிகை திரிஷா மீதும் நடிகை குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். நடிகர் மன்சூர் அலிகான் இதோடு விடாமல் ஒருவரும் தலா ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடை எனக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த வழக்கில் கூறி இருந்தார். நடிகர் மன்சூர் அலிகான் சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொண்டது போல் இந்த வழக்கு அவர் பக்கமே திரும்பி விட்டது.
இந்த வழக்கை நீதிபதி என் சதீஷ்குமார் விசாரணை செய்து இறுதி தீர்ப்பாக ஒரு மனிதர் ஒரே நேரத்தில் மூன்று பேரின் மேல் வழக்கு பதிவு செய்வது சட்ட ரீதியாக முடியாத ஒன்று. மேலும் பெண்களைப் பற்றி அவதூறாக பேசுவது யாராக இருந்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது தான் இயல்பு என்றும் இந்த வழக்கு முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் நேரத்தை பாழாக்கி விட்டதாகவும் தன்னை இன்னும் பிரபலப்படுத்திக் கொள்வதற்காகவும் தான் இந்த வழக்கை பதிவிட்டு இருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து விட்டார். நீதிபதி என் சதீஷ்குமார் மேலும் அபராதமாக ஒரு லட்ச ரூபாயை இரண்டு வாரத்திற்குள் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
திரிஷா மன்னிப்பை ஏற்றுக் கொண்டதுடன் இதை அப்படியே விட்டுவிட்டு இருந்தால் ஒரு லட்ச ரூபாய் நஷ்டமாக இருக்காது தன் கையாலே தன் கண்ணை குத்திக் கொண்டார் நடிகர் மன்சூர் அலிகான்.