சினிமா

“ நீ ஹீரோவா ? என என்னைக் கேவலமாக பார்த்தார்கள் ” – மனம் திறந்த லைவ் டுடே இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.. !

Pardeep Ranganathan Love Today

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் மனதைத் திருடிய திரைப்படம் லவ் டுடே. சமீபத்தில் இப்படத்தின் 100வது நாளை படக்குழு கொண்டாடியது. அதில் பிரதீப், இவானா, யுவன் மற்றும் சிலர் பங்கேற்றனர்.

நடப்பு இளைஞர்களுக்கு ஏற்ற கதையில் காமெடியைக் கலந்து தரமான படத்தை கொடுத்தார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் படம் அமோக வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக ஹிந்தியில் இப்படத்தை போனி கபூர் ரீமேக் செய்கிறார்.

Advertisement

படத்தின் மூலம் அசத்தலான வெற்றியுடன் தன் கேரியரைத் துவங்கியவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். 100வது நாள் கொண்டாட்ட விழாவில் பேசிய பிரதீப் சற்று மனம் திறந்து தான் கடந்து வந்த கஷ்ட்டத்தை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “ கோமாளி படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்கான அங்கீகாரம் எனக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. எல்லாம் ஓரம் வைத்துவிட்டு அடுத்து படத்தில் கவனம் செலுத்த தொடர்ந்தேன். லவ் டுடே கதையைப் பலரிடம் எடுத்துச் சென்றேன், எல்லாரும் கதைக் கேட்டுவிட்டு வேறு யாரையாவது நடிக்கச் சொல்லுங்கள் எனக் கூறி என்னைக் கேவலமாக அவமதித்தார்கள். ”

Advertisement

மேலும், “ ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் என் மேல் முழு நம்பிக்கை வைத்து இப்படத்தை என் போக்குக்கு இயக்க முழு சுதந்திரம் கொடுத்தார்கள். அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ” என்றார்.

அதோடு, “ யுவன் சாருடன் க்ளோசாக இணைந்து பணிபுரிந்ததில் மிகவும் சந்தோஷம், சிறப்பான இசையைக் கொடுத்தார். ஒரு காலத்தில் அவரின் கச்சேரியை பார்க்க டிக்கெட் இல்லாமல் சுவர் மீது அமர்ந்து கண்டு களித்தேன். இன்றோ அவர் என் படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மற்றும் அபார வெற்றியைத் தந்த மக்களுக்கு இங்கு நன்றி சொல்கிறேன். ” எனப் பேசினார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top