Thursday, May 2, 2024
- Advertisement -
Homeசினிமாநாளுக்கு நாள் வசூலில் அள்ளும் மார்க் ஆண்டனி.. மூன்று நாள் வசூல் விவரம்.. !

நாளுக்கு நாள் வசூலில் அள்ளும் மார்க் ஆண்டனி.. மூன்று நாள் வசூல் விவரம்.. !

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. அதிரடியான டிரெய்லர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணி அந்த எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளது.

- Advertisement -

முதல் மூன்று படங்களில் தோல்வியைத் தழுவிய இயக்குனர் ஆதிக் இம்முறை தவறுகள் அனைத்தையும் சரி செய்து பார்வையாளர்கள் மகிழும் வகையில் படத்தை உருவாக்கியுள்ளார் . டைம் டிராவல் – கேங்ஸ்டர் – காமெடி என இந்த மூன்றை வைத்து கமர்ஷியலில் கலக்கியுள்ளார்.

1975ஆம் ஆண்டு, கடந்த காலத்தைத் தொடர்பு கொள்ள ஓர் தொலைபேசியை கண்டுபிடிக்கிறார் செல்வராகவன். அந்த நாளே இரவு அவர் கிளப்பில் மரணமடைகிறார். அவருடன் ஆன்டனி கதாபாத்திரத்தில் வரும் விஷாலும் சுட்டுக் கொள்ளப்படுகிறார். அப்படியே 1995ஆம் ஆண்டுக்கு கதை மாறி மகன் விஷாலில் தொடர்கிறது.

- Advertisement -

இந்தக் கருவியை வைத்து மகன் விஷாலும் எஸ்.ஜே.சூர்யாவும் காலத்தை மாற்றி மாற்றி அமைக்கின்றனர். இந்த இடைவேளையில் நடக்கும் காட்சிகளும் காமெடிகளும் தான் படமே. இவர்களுடன் சுனில், மகேந்திரன், ரித்து வர்மா, கிங்ஸ்லி என அனைவரும் தங்களது பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.

- Advertisement -

முதல் நாளே படத்திற்கு நல்லக் கூட்டம். அதோடு அனைவரும் நல்ல வரவேற்பை கொடுத்ததால் அடுத்தடுத்த நாட்களில் நல்ல லாபத்தை மார்க் ஆண்டனி பெற்றுள்ளது. எஸ்.ஜே.சூர்யாவின் உடல் பாவனையில் காமடிக் காட்சிகளை ரசிக்கவே ஒரு கூட்டம் தியேட்டருக்கு செல்கிறது.

முதல் நாள் தமிழகத்தில் மட்டுமே 7.8 கோடிகளை வசூலித்தது. மேலும் கேரளாவில் 57 லட்சமும் கர்நாட்டகாவில் 60 லட்சமும் என நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் நாள் முடிவில் உலகளவில் மொத்தமாக 13 கோடிகள் ஆகும். விஷாலுக்கு தேவைப்பட்ட அந்த கம்பேக் இறுதியில் கிடைத்துள்ளது.

முதல் நாள் வசூலை விட இரண்டாம் நாள் இன்னும் அதிகம். அதை விட இன்று மூன்றாவது தினம் அதிகம். கடந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் ரசிகர்களுக்கும் சரி வசூலிக்கும் சரி இருவருக்கும் நல்ல விருந்து. இதுவரை தமிழகத்தில் 17 கோடிகள் வசூல் செய்துள்ளது. இன்னும் 2 வாரங்கள் சிறப்பாக ஓடி நல்ல லாபத்தை ஈட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Most Popular