தமிழ் சினிமாவில் புரட்சிகரமான படங்களை எடுத்து பிரபலமானவர் இயக்குனர் ரஞ்சித். தற்போது அவர் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் எடுத்த சார்பட்டா பரம்பரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை பா ரஞ்சித் எடுத்து வருகிறார். இந்த படத்தின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்த நிலையில் தற்போது இதன் மேக்கிங் ரசிகர்களை மிரள வைத்திருக்கிறது.ஆள் அடையாளம் தெரியாத வகையில் நடிகர் விக்ரம் இருக்கிறார்.
இதனை பார்க்கும்போது நடிகர் கமல்ஹாசனின் நீண்ட நாள் கனவான மருதநாயகத்தை பார்ப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போராடும் அரசனைக் குறித்து மருதநாயகம் என்ற படத்தை 25 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்க கமலஹாசன் திட்டமிட்டார்.
இதன் பாதி படங்களை எடுத்து முடித்து விட்டாலும் பட்ஜெட் இடம் கொடுக்காததால் அந்த படத்தை அப்போது கைவிட்டார். இதில் நடிகர் கமலஹாசன் எவ்வாறு மாறுபட்ட வேடத்தில் நடித்து அந்தக் கனவை முடிக்க முடியாமல் பாதியில் விட்டாரோ தற்போது அதே பாணியில் நடிகர் விக்ரமும் பா.ரஞ்சித்தும் தங்கலான் படத்தை எடுத்திருக்கிறார்கள். மருதநாயகம் படத்தில் கமல் எந்தெந்த ரோலில் வருவாரோ அதனையும் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள தங்கலான் படத்தில் புகைப்படத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பிரமித்து போயிருக்கிறார்கள்.
இதனால் நடிகர் கமலஹாசனின் கனவை பா ரஞ்சித் நிறைவேற்றி விட்டதாக பலரும் பாராட்டு வருகின்றனர். மேலும் சிலர் இது மருதநாயகம் படத்தின் கதையாக இருக்குமோ என்றும் கூறி வருகின்றனர். ஆனால் இது கேஜிஎப் தங்க சுரங்கத்தில் நடைபெறும் சுரண்டல்களை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படமாகும்.