சினிமா

மாஸ்டர் படத்திற்கு 7 விருதுகள் பிரிவில் பரிந்துரை.. சிறந்த நடிகராக விஜய் போட்டி

கடந்த ஆண்டு கொரோனாவால் திரையரங்குகள் 50% பார்வையாளர்களுடன் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது. திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடி கொண்டு இருந்த நிலையில், தளபதி விஜய் நடிப்பில் மாநகரம்,கைதி, போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தை 50% மக்கள் மட்டுமே பார்க்கக் கூடிய நிலையிலும் 300 கோடி ரூபாய் வசூலை பெற்ற மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.இந்த நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்துள்ளது.

Advertisement

தென்னிந்திய சினிமாவில் வழங்கப்படும் SIIMA என்ற விருதுக்கு ஏழு பிரிவுகளில் மாஸ்டர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது .சிறந்த இயக்குநர் பிரிவில் லோகேஷ் கனகராஜ், சிறந்த அறிமுக நடிகை பிரிவில் மாளவிகா மோகனன், சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் சத்யன் சூரியன், சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் பிரிவில் மகேந்திரன், சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் அனிருத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் தளபதி விஜய்க்கு வில்லனாக நடிக்கும் தகுதி உடையவர் விஜய் சேதுபதி என்பதால் சிறந்த வில்லன் பிரிவில் விஜய் சேதுபதியும், சிறந்த நடிகர் பிரிவில் விஜய்யும் போட்டியிடுகின்றனர். இதனால் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கும் தளபதி ரசிகர்கள் தங்களுடைய ஆர்வத்தோடு இந்த பிரிவுகளுக்கெல்லாம் ஓட்டு போட்டுக்கொண்டு வருகிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது.

இதேபோன்று தளபதி 67 திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குனர்கள் மற்றும் கதை ஆசிரியர்களுடன் நடிகர் விஜய் சந்தித்து பேசி இருக்கும் சம்பவம் கோலிவுட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தளபதி 67 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேசியதாகவும் அக்டோபர் மாதம் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் அவரது உதவி இயக்குனர்கள் நடிகர் விஜய் உடன் இணைந்து புகைப்படமம் எடுத்துக் கொண்டனர்.

Advertisement

இது தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.நடிகர் விஜய் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்கி வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் திரைக்கு வர இருக்கிறது.ஆனால் அதற்குள் தளபதி 67 படத்திற்கான எதிர்பார்ப்பு எதிரி இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

TOP STORIES

To Top