நடிகர் விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முமரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய், திரிஷா,அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தில் கேரளா நடிகர் மேத்யூ தாமஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும் பிக் பாஸ் ஜனனியும் இந்த படத்தின் நடிப்பதாக தகவல் வெளியானது. இதில் மேத்தீவ் தாமஸ் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர் தான் நடிகர் விஜய்யின் மகனாக நடித்து வருவதாக கூறியுள்ளார்.
இதற்காக தாடி எல்லாம் கிளீன் ஷேவ் செய்து சிறுபிள்ளை போல் தான் அந்த படத்தில் காட்சியளித்ததாகவும் கூறினார். தாமஸ் இந்த பேட்டி ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகிவிட்டது. லியோ படம் ஹாலிவுட் பிளாக்பஸ்டர் திரைப்படமான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு பக்கங்கள் நிறைந்த வரலாறை கொண்ட ஒருவன் திருந்தி,புதிய வாழ்க்கையை தொடங்கி தனது குடும்பத்தினருடன் காபி ஷாப் நடத்தி வருகிறார். அப்போது அங்கு இருக்கும் வாடிக்கையாளர்களை சிலர் கிண்டல் செய்கிறார்கள். அப்போது படத்தின் ஹீரோ அந்த நபர்களை தாக்கி வாடிக்கையாளர்களை காப்பாற்றுகிறார்.
இதன் மூலம் அந்த நம்பர் பிரபலமாகிறார். செய்திகள் எல்லாம் அவர்களுடைய புகைப்படம் வெளியாகிறது. இதனை பார்த்து அவரை தேடி வரும் நபர்கள் படத்தின் ஹீரோவை கண்டுபிடித்து தாக்குகிறார்கள். அப்போது ஹீரோ தனது குடும்பத்தையும் பழைய எதிரிகளையும் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் படத்தின் கதை. இதைத்தான் தற்போது லோகேஷ் கனகராஜ் ரீமேக் செய்து எடுத்து வருகிறார் என தெரிகிறது. நடிகர் விஜய்க்கு ஏற்ற கதை போல் இது இருப்பதாக அப்போதே சினிமா விமர்சகர்கள் வரவேற்பு தெரிவித்து வந்தனர் குறிப்பிடத்தக்கது.