நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. இது நடிகர் விஷாலின் திரைப்பட வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால்
நடிகர் விஷால் நடித்த கடைசியாக வெளியான ஏழு படங்களும் தோல்வியில் முடிவடைந்தது. அவர் கடைசியாக வெற்றி பெரும் கொடுத்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதனால் நடிகர் விஷால் மார்க் ஆண்டனியை மிகவும் நம்பி இருக்கிறார்.
லேண்ட்லைன் மூலம் டைம் டிராவல் செய்யும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த டிரைலரை பார்த்த நடிகர் விஜய் கதை சிறப்பாக இருப்பதாக பாராட்டி இருந்தார். இந்த நிலையில் இந்த படத்தின் தொடர்பான மற்றொரு அப்டேட் கிடைத்துள்ளது.
இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்யப்பட்டாலும் சில காட்சிகள் இன்னும் எடுக்க இருந்ததாம் .அதன் காட்சிகள் நேற்று முடிவடைந்து இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக பட குழுவினர் கேக் வெட்டி இருக்கிறார்கள்.
இந்த செய்தியை அறிந்த பல ரசிகர்களும் படம் முடிவு அடைவதற்கு முன்பே ட்ரைலர் வெளியிட தனி தில் வேண்டும் என பாராட்டி இருக்கிறார்கள். மேலும் சிலர் படத்தை எடிட்டிங் செய்த போது சில காட்சிகள் இன்னும் சிறப்பாக எடுத்து இருக்கலாம் என்பதால் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி இருக்கலாம் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விஷால் மூன்று கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. விஷால் மட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா செல்வ ராகவன் ஆகியோரும் 3 கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனால் தமிழ் சினிமாவில் இந்தத் திரைப்படம் புதிய மைல்கல்லை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கமாக பிட்டு காட்சிகளை ஆதிக்க ரவிச்சந்திரன் சேர்ப்பார். ஆனால் இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை என்றும் குடும்பங்கள் முழுவதும் உட்கார்ந்து பார்க்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.